வீடு / சமையல் குறிப்பு / பரங்கிக்காய் பருப்புக் கூட்டு

Photo of Yellow Pumpkin Dal Kootu by Ayesha Ziana at BetterButter
594
5
0.0(0)
0

பரங்கிக்காய் பருப்புக் கூட்டு

Oct-11-2017
Ayesha Ziana
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பரங்கிக்காய் பருப்புக் கூட்டு செய்முறை பற்றி

பரங்கிக்காய், பாசிப்பருப்பு மற்றும் அரைத்த தேங்காய் மசாலாவில் செய்த கூட்டு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • பிரெஷர் குக்
  • ப்லெண்டிங்
  • சைட் டிஷ்கள்
  • க்ளூட்டன் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மஞ்சள் பூசணிக்காய் (பரங்கிக்காய்) 1 கப்
  2. பாசி பருப்பு 2 டேபிள் தேக்கரண்டி
  3. துருவிய தேங்காய் 3 டேபிள் தேக்கரண்டி
  4. மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
  5. மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி
  6. சீரகம் 3/4 தேக்கரண்டி
  7. பூண்டு 2 முதல் 3
  8. கடுகு 1.5 தேக்கரண்டி
  9. கறிவேப்பிலை 1 கொத்து
  10. உப்பு தேவைக்கு
  11. தண்ணீர் தேவைக்கு
  12. எண்ணெய் தேவைக்கு

வழிமுறைகள்

  1. குக்கரில் பரங்கிக்காய் , பாசி பருப்பு, சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து 4 விசில் வேக வைக்கவும்.
  2. மிக்ஸியில் தேங்காய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகம், பூண்டு, சிறிது தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  3. அரைத்த மசாலாவை குக்கரில் சேர்த்து, மேலும் சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து சில நிமிடங்கள் வேக விடவும்.
  4. லேசாக கொதித்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
  5. ஒரு சின்ன வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கூட்டுடன் கலந்து பரிமாறவும். மிகவும் சுவையான கூட்டு தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்