வீடு / சமையல் குறிப்பு / கேரள சம்மந்திப் பொடி

Photo of Roasted Coconut Dry chutney Powder by Janaki Priya at BetterButter
1710
3
0.0(0)
0

கேரள சம்மந்திப் பொடி

Oct-12-2017
Janaki Priya
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

கேரள சம்மந்திப் பொடி செய்முறை பற்றி

சம்மந்தி பொடி சூடான சாதத்தில் சிறிது நெய் விட்டு அதனுடன் பிசைந்து சாப்பிட ஏற்றது. தயிர் சாதத்துடன் காரசாரமாக சாப்பிட ஏற்ற அருமையான பொடி. தயிர்சாதம், சுடுசாதம், இட்லி , தோசை போன்றவற்றுடனும் தொட்டு சாப்பிட ஏற்ற பொடி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கேரளா
  • ரோசஸ்டிங்
  • அக்கம்பனிமென்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. தேங்காய் துருவல் -  2 -3கப் (1 முழு தேங்காய்)
  2. வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
  3. தனியா/ கொத்தமல்லி -  2 மேசைக்கரண்டி
  4. சிகப்பு வற்றல் மிளகாய் - 6 அல்லது 8
  5. கடலை பருப்பு -1 மேசைக்கரண்டி
  6. பூண்டு - 10  பல்
  7. புளி- சிறிதளவு (நெல்லிக்காய் உருண்டை அளவு)
  8. பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
  9. உப்பு - தேவையான அளவு
  10. கறிவேப்பிலை- ஒரு கொத்து
  11. எண்ணெய் -1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு அடிக்கனமான வாணலியில் 1/2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு முதலில் தனியா/ கொத்தமல்லி சேர்த்து குறைந்த  சூட்டில் வறுக்கவும்.
  2. அது சிவந்தவுடன், வெந்தயம், கடலை பருப்பு மற்றும் சிகப்பு வற்றல் மிளகாய் ஆகியவற்றை சேர்த்து சற்று நிறம் மாறும் (சிவக்கும்) வரை வறுக்கவும்.
  3. பின்பு அவற்றை ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
  4. அதே அடிக்கனமான வாணலியில்  1/2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு, கறிவேப்பிலை, தேங்காய் துருவலை சேர்த்து மிதமான சூட்டில், நன்கு சிவந்து (ப்ரவுன்) நிறம் வரும் வரை வறுக்கவும். தேங்காய் கருகாமல் பார்த்துக் கவனமாக வறுக்கவும்.
  5. அடுப்பை அணைத்த பின், வாணலியில் தேங்காய் துருவல் சூடாக இருக்கும் போதே, அதனுடன் பெருங்காயத்தூள், உப்பு, பூண்டு, புளி சேர்த்து சிறிது  வறுக்கவும். இதனை ஏற்கனவே தட்டில் வறுத்து வைத்துள்ள பொருட்களுடன் சேர்த்து ஆற விடவும்.
  6. அவை நன்கு ஆறிய பின் மிக்ஸி ஜாரில் வறுத்த தேங்காய் துருவல் கலவையை சேர்த்து சிறிது கரகரப்பான பொடியாக அரைக்கவும்.
  7. சுவையான சம்மந்தி பொடி தயார்!!
  8. சூடான சாதத்தில் சிறிது நெய் விட்டு அதனுடன் பிசைந்து சாப்பிட ஏற்றது. தயிர் சாதத்துடன் காரசாரமாக சாப்பிட ஏற்ற அருமையான பொடி.
  9. சம்மந்தி பொடி இட்லி தோசை போன்றவற்றுடனும் தொட்டு சாப்பிட ஏற்றது.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்