கேரள சம்மந்திப் பொடி | Roasted Coconut Dry chutney Powder in Tamil

எழுதியவர் Janaki Priya  |  12th Oct 2017  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Roasted Coconut Dry chutney Powder by Janaki Priya at BetterButter
கேரள சம்மந்திப் பொடிJanaki Priya
 • ஆயத்த நேரம்

  15

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  35

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  10

  மக்கள்

16

0

கேரள சம்மந்திப் பொடி recipe

கேரள சம்மந்திப் பொடி தேவையான பொருட்கள் ( Ingredients to make Roasted Coconut Dry chutney Powder in Tamil )

 • தேங்காய் துருவல் -  2 -3கப் (1 முழு தேங்காய்)
 • வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
 • தனியா/ கொத்தமல்லி -  2 மேசைக்கரண்டி
 • சிகப்பு வற்றல் மிளகாய் - 6 அல்லது 8
 • கடலை பருப்பு -1 மேசைக்கரண்டி
 • பூண்டு - 10  பல்
 • புளி- சிறிதளவு (நெல்லிக்காய் உருண்டை அளவு)
 • பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
 • உப்பு - தேவையான அளவு
 • கறிவேப்பிலை- ஒரு கொத்து
 • எண்ணெய் -1 தேக்கரண்டி

கேரள சம்மந்திப் பொடி செய்வது எப்படி | How to make Roasted Coconut Dry chutney Powder in Tamil

 1. ஒரு அடிக்கனமான வாணலியில் 1/2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு முதலில் தனியா/ கொத்தமல்லி சேர்த்து குறைந்த  சூட்டில் வறுக்கவும்.
 2. அது சிவந்தவுடன், வெந்தயம், கடலை பருப்பு மற்றும் சிகப்பு வற்றல் மிளகாய் ஆகியவற்றை சேர்த்து சற்று நிறம் மாறும் (சிவக்கும்) வரை வறுக்கவும்.
 3. பின்பு அவற்றை ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
 4. அதே அடிக்கனமான வாணலியில்  1/2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு, கறிவேப்பிலை, தேங்காய் துருவலை சேர்த்து மிதமான சூட்டில், நன்கு சிவந்து (ப்ரவுன்) நிறம் வரும் வரை வறுக்கவும். தேங்காய் கருகாமல் பார்த்துக் கவனமாக வறுக்கவும்.
 5. அடுப்பை அணைத்த பின், வாணலியில் தேங்காய் துருவல் சூடாக இருக்கும் போதே, அதனுடன் பெருங்காயத்தூள், உப்பு, பூண்டு, புளி சேர்த்து சிறிது  வறுக்கவும். இதனை ஏற்கனவே தட்டில் வறுத்து வைத்துள்ள பொருட்களுடன் சேர்த்து ஆற விடவும்.
 6. அவை நன்கு ஆறிய பின் மிக்ஸி ஜாரில் வறுத்த தேங்காய் துருவல் கலவையை சேர்த்து சிறிது கரகரப்பான பொடியாக அரைக்கவும்.
 7. சுவையான சம்மந்தி பொடி தயார்!!
 8. சூடான சாதத்தில் சிறிது நெய் விட்டு அதனுடன் பிசைந்து சாப்பிட ஏற்றது. தயிர் சாதத்துடன் காரசாரமாக சாப்பிட ஏற்ற அருமையான பொடி.
 9. சம்மந்தி பொடி இட்லி தோசை போன்றவற்றுடனும் தொட்டு சாப்பிட ஏற்றது.

எனது டிப்:

இந்த பொடியை நன்கு இறுக்க மூடிய பாத்திரத்தில் போட்டு வைத்தால் 2 மாதம் வரை கெட்டு போகாமல் உபயோகிக்கலாம்.

Reviews for Roasted Coconut Dry chutney Powder in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.