Photo of Moong dal egg drop by Asiya Omar at BetterButter
367
5
0.0(0)
0

Moong dal egg drop

Oct-12-2017
Asiya Omar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Moong dal egg drop செய்முறை பற்றி

பாசிப்பருப்புடன் முட்டை சேர்த்து சமைப்பது எங்கள் ஊர் வழக்கம். சுவை அசத்தலாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாசிப்பருப்பு -75 - 100 கிராம்
  2. முட்டை- 2
  3. மிளகாய், மஞ்சள் ,சீரகத்தூள் - தலா கால் தேக்கரண்டி
  4. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  5. பெரிய வெங்காயம், தக்காளி - 1
  6. பச்சைமிளகாய் கீறியது -1
  7. நறுக்கிய மல்லி இலை - சிறிது
  8. உப்பு - சிறிது
  9. தாளிக்க எண்ணெய், நெய் - 2 தேக்கரண்டி
  10. கடுகு - அரை டீஸ்பூன்
  11. கிள்ளிய மிளகாய் வற்றல் -1
  12. கறிவேப்பிலை - 2 இணுக்கு.

வழிமுறைகள்

  1. பாசிப்பருப்பை லேசாக மணம் வரும் படி வறுத்துக் கொள்ளவும்.
  2. குக்கரில் தேவைக்கு தண்ணீர், பாதி வெங்காயம், ஒரு தக்காளி நறுக்கியது, மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன், மேலே சொன்ன தூள் வகைகள் சேர்த்து மூடி 2 -3 விசில் விடவும்.
  3. ஆவியடங்கியவுடன் திறந்து தேவைக்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். முட்டையை விரும்பினால் சிறிது மிளகுத்தூள் சேர்த்து அடித்து கொடி போல் ஊற்றவும்.
  4. அடுப்பை அணைக்கவும். உப்பு சரி பார்க்கவும். நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.
  5. வாணலியில் எண்ணெய் நெய் விட்டு, கடுகு, வற்றல், கறிவேப்பிலை வெடிக்க விடவும். நறுக்கிய பாதி வெங்காயம் சேர்த்து வதக்கி தாளித்ததை பாசிப்பருப்பு முட்டையில் கொட்டவும்.
  6. சுவையான பாசிப்பருப்பு முட்டை ஊற்றியது தயார். சோறு, சப்பாத்தியுடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்