வீடு / சமையல் குறிப்பு / நெத்திலி வடை

Photo of Nethili Vada by Ayesha Ziana at BetterButter
347
3
0.0(0)
0

நெத்திலி வடை

Oct-12-2017
Ayesha Ziana
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

நெத்திலி வடை செய்முறை பற்றி

நெத்திலி மீன் மற்றும் அரைத்த தேங்காய் மசாலாவில் செய்த வடை.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கேரளா
  • ஃபிரையிங்
  • அப்பிடைசர்கள்
  • லாக்டோஸ் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. நெத்திலி 1 கப்
  2. துருவிய தேங்காய் 3/4 கப்
  3. சின்ன வெங்காயம் 4
  4. மிளகாய் தூள் 1 தேக்கரண்டி நிறைய
  5. மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
  6. சோம்பு 1 1/2 தேக்கரண்டி
  7. பட்டை 1 சிறு துண்டு
  8. கறிவேப்பிலை 1 கொத்து
  9. உப்பு தேவைக்கு
  10. தண்ணீர் தேவைக்கு
  11. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. மிக்ஸியில் துருவிய தேங்காய், சின்ன வெங்காயம், மிளகாய் தூள், மஞ்சள் தூள், சோம்பு, பட்டை, கறிவேப்பிலை, சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு முறை அரைக்கவும்.
  2. பின்னர், முள் நீக்காத நெத்திலியைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, பின் உப்பும் சேர்த்து வடை பதத்திற்கு அரைக்கவும். அரைக்கும் போது தண்ணீர் மிகுந்து விடாமல் பார்க்கவும், நெத்திலி சேர்த்த பிறகு தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை.
  3. வடை மாவில் இருந்து சின்ன சின்ன வடைகளாக தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொரிக்கவும். மிகவும் சுவையான நெத்திலி வடை தயார். இது கன்னியாகுமரி மற்றும் கேரளா மக்களிடையே பிரபலம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்