வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபிள் தேங்காய் பால் புலாவ்

Photo of VEGETABLE COCONUT MILK PULAV by Priya Mani at BetterButter
419
6
0.0(0)
0

வெஜிடபிள் தேங்காய் பால் புலாவ்

Oct-12-2017
Priya Mani
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபிள் தேங்காய் பால் புலாவ் செய்முறை பற்றி

தேங்காய் பால் காய்கறி புலாவ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • சௌத்இந்தியன்
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாசுமதி அரிசி 2 கப்
  2. தேங்காய் பால் 2 கப்
  3. கேரட் , உருளைக்கிழங்கு, பட்டாணி, பீன்ஸ், காலிஃப்ளவர் அனைத்தும் சேர்த்து 1 கப்
  4. பட்டை, பிரிஞ்சி இலை, லவங்கம், ஏலக்காய், கருப்பு ஏலக்காய், மற்றும் பல கரம் மசாலாக்கள்
  5. இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்புன்
  6. எண்ணெய்/ நெய் 2 தேக்கரண்டி
  7. பிரியாணி ஜீரகம் / ஷாஹி ஜீரா 1 தேக்கரண்டி
  8. உப்பு தேவையான அளவு
  9. வெள்ளை மிளகு தூள் 3/4 தேக்கரண்டி
  10. வெங்காயம் 2 நீளமாக நறுகியது
  11. பச்சை மிளகாய் 2
  12. கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது
  13. தண்ணிர் 1 கப்

வழிமுறைகள்

  1. முதலில் பாசுமதி அரிசியை நன்கு கழுவி 1/2 நேரம் ஊற வைக்கவும்
  2. அதற்குள் அனைத்து காய்கறிகரிகளை கழுவி நறுக்கி கொள்ளவும்
  3. அரிசி ஊறியதும் நன்கு தண்ணீரை வடித்து கொள்ளவும்
  4. ஒரு குக்கரில் நெய் அல்லது என்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் பட்டை, லவங்கம், பிரியாணி இலை மற்றும் ஏலக்காய் சேர்த்து வதக்கவும்
  5. அதனுடன் ஜீரகம், பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  6. வெங்காயம் வதங்கியதும் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்
  7. அதனுடன் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து வதக்கவும். அதனுடன் உப்பு சேர்த்து வதக்கவும், காய்கறி சற்று வதங்கியதும் அதனுடன் ஊறவைத்த அரசி சேர்க்கவும்
  8. 2 கப் அரிசிக்கு 2 கப் தேங்காய் பால் 1 கப் தண்ணிர் சேர்க்கவும் நன்கு கலக்கவும்
  9. உப்பு பார்க்கவும். வெள்ளை மிளகு தூள் சேர்த்து கொள்ளவும்
  10. குக்கரை முடி 2 விசில் விடவும் பிரஸ்சர் நீங்கியதும் மெதுவாக சாதம் உடையாமல் மெதுவாக கலக்கவும் கொத்தமல்லி தழை தூவி சூடாக ராய்தா உடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்