வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் கூட்டு

Photo of Snake Gourd Kootu by Janaki Priya at BetterButter
1646
7
0.0(0)
0

புடலங்காய் கூட்டு

Oct-12-2017
Janaki Priya
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் கூட்டு செய்முறை பற்றி

சுடு சாதம், காரக்குழம்பு, வத்தக்குழம்பு, ரசம், சப்பாத்தி போன்றவற்றுடன் சாப்பிட அருமையான கூட்டு இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. தேங்காய் துருவல் - 1/2 கப்
  2. புடலைங்காய் - 1
  3. இஞ்சி - சிறிதளவு
  4. பச்சை மிளகாய்- 4
  5. சீரகம்- 2 தேக்கரண்டி
  6. பாசிபருப்பு- 1/4 கப்
  7. கடலை பருப்பு - 1/4 கப்
  8. மஞ்சள் தூள்- 1/3 தேக்கரண்டி
  9. உப்பு- தேவையான அளவு
  10. எண்ணெய்/ நெய் - 1 தேக்கரண்டி
  11. கடுகு - 1/4 தேக்கரண்டி
  12. உளுத்தம் பருப்பு - 1/4 தேக்கரண்டி
  13. சிகப்பு வற்றல் மிளகாய் - 3
  14. பெருங்காயத்தூள் - சிறிதளவு
  15. கறிவேப்பிலை - சிறிதளவு

வழிமுறைகள்

  1. புடலைங்காயை கழுவி சுத்தம் செய்து , சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. பாசிப்பருப்பு மற்றும் கடலைபருப்பை நன்கு கழுவி சுத்தம் செய்த பின்பு  அவற்றை 15 நிமிடம் வரை தண்ணீரில் ஊற வைக்கவும். பின்பு நீரை வடிகட்டவும்.
  3. குக்கரில் முதலில் ஊற வைத்த பருப்பு சேர்த்து, அதன் மேல் புடலைங்காய் துண்டுகளை வைக்கவும். அதனுடன் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து 3 விசில் வரும் வரை வேக விடவும்.  
  4.   இதனிடையே மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை  சேர்த்து நன்கு விழுதாக அரைத்து வைத்து கொள்ளவும்.
  5. குக்கரில் அழுத்தம் முழுவதும் வெளியேறிய பின், அதனை திறந்து பருப்பை லேசாக கிளறி விடவும்.
  6. பின் மீண்டும் குக்கரை சூடேற்றி  அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து நன்கு கலந்து விடவும். 5 நிமிடம் வரை மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.
  7. பின் சூடான வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, சிகப்பு வற்றல் மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை  ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி கூட்டின் மேல் ஊற்றவும்.
  8. சுவையான புடலைங்காய் கூட்டு தயார்.!!!
  9. சுடு சாதம், காரக்குழம்பு, வத்தக்குழம்பு, ரசம் சப்பாத்தி போன்றவற்றுடன் சாப்பிட அருமையான கூட்டு இது.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்