ஓட்டு மாவு | Ootu Maavu in Tamil

எழுதியவர் Asiya Omar  |  12th Oct 2017  |  
5 from 1ரிவியூ மதிப்பீடு செய்
 • Ootu Maavu recipe in Tamil,ஓட்டு மாவு, Asiya Omar
ஓட்டு மாவுAsiya Omar
 • ஆயத்த நேரம்

  30

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  10

  மக்கள்

9

1

ஓட்டு மாவு recipe

ஓட்டு மாவு தேவையான பொருட்கள் ( Ingredients to make Ootu Maavu in Tamil )

 • வறுத்த புட்டு மாவு (அரிசி) - 1 கிலோ
 • பெரிய தேங்காய் -2 (பால் எடுக்க)
 • முட்டை - 2
 • சீனி - கால் கிலோ

ஓட்டு மாவு செய்வது எப்படி | How to make Ootu Maavu in Tamil

 1. வறுத்த அரிசி மாவை மீண்டும் நைசாக சலித்துக் கொள்ளவும்
 2. தேங்காயைத்துருவி வெந்நீர் தெளித்து விரவி பனியன் துண்டு கொண்டு பிழிந்து பால் எடுக்க வேண்டும். இல்லையெனில் லேசாக மிக்ஸி ஜாரில் போட்டு அதில் அரைத்தும் தேங்காய்ப்பால் திக்காக எடுத்து வைக்கலாம். முட்டையை நன்கு அடித்து வைக்கவும்.
 3. சலித்த மாவில் தேங்காய்ப்பால், முட்டை சேர்த்து விரவவும். மாவு கொள்ளும் அளவு பார்த்து சேர்க்க வேண்டும். விரவிய பின்பு சிறிது ஊற விடவும்.
 4. மீண்டும் விரவி அதனை கட்டியில்லாமல் மீண்டும் சலித்து எடுத்து வைக்கவும்.
 5. மாவு வறுக்கும் ஓட்டை(இரும்புச் சட்டி) சூடு படுத்தவும். ஓட்டில் சிறிது நெய் தடவிக் கொள்ளலாம்.
 6. தயார் செய்த மாவை நிதானமான சூட்டில் கைவிடாமல் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
 7. வறுத்த மாவை ஓட்டில் இருந்து எடுத்து ஒரு பாத்திரத்தில் கொட்டி துணி போட்டு மூடி நன்கு ஆற வைக்கவும்.
 8. மறுநாள் மாவிற்கு நான்கில் ஒரு பகுதி சீனி போட்டு விரவவும். சீனி சேர்க்காமல் எடுத்து வைத்து தேவைக்கு சாப்பிடும் பொழுதும் சீனி சேர்க்கலாம்.
 9. காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால் 6 மாதம் வரை வைத்து உபயோகிக்கலாம்.
 10. சுவையான ஓட்டு மாவு தயார். சும்மாவே ஸ்பூன் போட்டு சாப்பிடலாம். இதனை பாலில் ஊற வைத்தோ அல்லது வாழைப் பழம் போட்டு பிணைந்தோ சாப்பிடலாம்.
 11. பசி எடுக்கும் சமயம் டக்கென்று எடுத்து சாப்பிட ஏதுவானது.

எனது டிப்:

மாவு கொள்ளும் அளவு கெட்டி பால் சேர்க்கவும். தேவைப்பட்டால் இரண்டாம் பாலும் சிறிது தெளித்து விரவலாம்.

Reviews for Ootu Maavu in tamil (1)

Raihanathus Sahdhiyya2 years ago

One of my all tym favourite :yum::yum::heart_eyes::heart_eyes:
Reply