Photo of Ootu Maavu by Asiya Omar at BetterButter
5315
7
0.0(1)
0

Ootu Maavu

Oct-12-2017
Asiya Omar
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

Ootu Maavu செய்முறை பற்றி

இந்த பதார்த்தத்தை தேங்காய்ப்பால் இல்லாமல் செய்யவே முடியாது. வறுத்த அரிசி மாவு, தேங்காய்ப்பால், முட்டை, சீனி சேர்த்து செய்வது.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ரோசஸ்டிங்
  • ஸ்நேக்ஸ்
  • க்ளூட்டன் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. வறுத்த புட்டு மாவு (அரிசி) - 1 கிலோ
  2. பெரிய தேங்காய் -2 (பால் எடுக்க)
  3. முட்டை - 2
  4. சீனி - கால் கிலோ

வழிமுறைகள்

  1. வறுத்த அரிசி மாவை மீண்டும் நைசாக சலித்துக் கொள்ளவும்
  2. தேங்காயைத்துருவி வெந்நீர் தெளித்து விரவி பனியன் துண்டு கொண்டு பிழிந்து பால் எடுக்க வேண்டும். இல்லையெனில் லேசாக மிக்ஸி ஜாரில் போட்டு அதில் அரைத்தும் தேங்காய்ப்பால் திக்காக எடுத்து வைக்கலாம். முட்டையை நன்கு அடித்து வைக்கவும்.
  3. சலித்த மாவில் தேங்காய்ப்பால், முட்டை சேர்த்து விரவவும். மாவு கொள்ளும் அளவு பார்த்து சேர்க்க வேண்டும். விரவிய பின்பு சிறிது ஊற விடவும்.
  4. மீண்டும் விரவி அதனை கட்டியில்லாமல் மீண்டும் சலித்து எடுத்து வைக்கவும்.
  5. மாவு வறுக்கும் ஓட்டை(இரும்புச் சட்டி) சூடு படுத்தவும். ஓட்டில் சிறிது நெய் தடவிக் கொள்ளலாம்.
  6. தயார் செய்த மாவை நிதானமான சூட்டில் கைவிடாமல் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
  7. வறுத்த மாவை ஓட்டில் இருந்து எடுத்து ஒரு பாத்திரத்தில் கொட்டி துணி போட்டு மூடி நன்கு ஆற வைக்கவும்.
  8. மறுநாள் மாவிற்கு நான்கில் ஒரு பகுதி சீனி போட்டு விரவவும். சீனி சேர்க்காமல் எடுத்து வைத்து தேவைக்கு சாப்பிடும் பொழுதும் சீனி சேர்க்கலாம்.
  9. காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால் 6 மாதம் வரை வைத்து உபயோகிக்கலாம்.
  10. சுவையான ஓட்டு மாவு தயார். சும்மாவே ஸ்பூன் போட்டு சாப்பிடலாம். இதனை பாலில் ஊற வைத்தோ அல்லது வாழைப் பழம் போட்டு பிணைந்தோ சாப்பிடலாம்.
  11. பசி எடுக்கும் சமயம் டக்கென்று எடுத்து சாப்பிட ஏதுவானது.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Raihanathus Sahdhiyya
Oct-12-2017
Raihanathus Sahdhiyya   Oct-12-2017

One of my all tym favourite :yum::yum::heart_eyes::heart_eyes:

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்