வீடு / சமையல் குறிப்பு / எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு

Photo of Brinjal Kara Kuzhambu by Jayasakthi Ekambaram at BetterButter
825
10
0.0(0)
0

எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு

Oct-12-2017
Jayasakthi Ekambaram
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்முறை பற்றி

கத்திரிக்காயை எண்ணெயில் வதக்கி செய்யும் புளி குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. புளி - பெரிய எலுமிச்சை அளவு
  2. குழம்பு மிளகாய் தூள்- 6 தேக்கரண்டி
  3. பொடியாக நறுக்கிய வெங்காயம்- 1
  4. 2 தக்காளியின் அரைத்த விழுது
  5. கடுகு 1 தேக்கரண்டி
  6. சீரகம் 1/2 தேக்கரண்டி
  7. வெந்தயம் 1/4 தேக்கரண்டி
  8. கத்தரிக்காய் கொத்தாக வெட்டியது 200 கிராம்
  9. நல்லெண்ணெய் 6 தேக்கரண்டி
  10. உப்பு தேவையான அளவு
  11. தேங்காய் விழுது 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. சுடான வாணயில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம் ஒவ்வொன்றாக போட்டு பொரிய விடவும்.
  2. பின்னர் நறுக்கிய வெங்காயத்தை போட்டு சிவக்க வதக்கவும்.
  3. தக்காளி விழுதை ஊற்றி 2 நிமிடம் வதக்கவும்
  4. அதன் மேல் கத்தரிக்காயை போட்டு மூடி போட்டு மூடவும்.
  5. அவ்வப்போது திறந்து கிளறவும்
  6. 7 நிமிடம் மூடி அவ்வப்போது கிளறி கத்தரிக்காயை வதக்கவும்
  7. புளித்தண்ணீரை ஊற்றி மிளகாய் தூள், உப்பு சேர்க்கவும்
  8. 5 நிமிடம் பெரிய தீயில் வைத்து கொதிக்க விடவும்
  9. பிறகு அடுப்பை குறைத்து மூடி போட்டு சமைக்கவும்
  10. காய் வெந்து குழம்பு கெட்டியானவுடன் தேங்காய் விழுதை சேர்க்கவும்.
  11. தேங்காய் ஊற்றி 1 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்