வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் மாம்பழ பணக்கோட்டா

Photo of Coconut Mango Pannacotta by Jayanthy Asokan at BetterButter
85
4
0.0(0)
0

தேங்காய் மாம்பழ பணக்கோட்டா

Oct-12-2017
Jayanthy Asokan
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
180 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் மாம்பழ பணக்கோட்டா செய்முறை பற்றி

இது ஒரு இத்தாலி டெஸெர்ட். நம் இந்திய காய் மட்டும் பழங்களை வைத்து செய்ப்பட்ட இனிப்பாகும் ஆகும்.

செய்முறை டாக்ஸ்

 • முட்டை இல்லா
 • மீடியம்
 • டின்னெர் பார்ட்டி
 • இத்தாலிய
 • சிம்மெரிங்
 • சில்லிங்
 • டெஸர்ட்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. தேங்காய் பால் 1 1/2 கப் முதல் பால்
 2. மாம்பழ கூழ் 1/2 கப்
 3. கிரீம் 1/2 கப்
 4. சர்க்கரை 1/2 கப்
 5. ஜெலட்டின் 1 1/2 தேக்கரண்டி
 6. தண்ணீர் 1 கப்
 7. தேங்காய் துருவல், புதினா இலை மட்டும் செர்ரி அலங்கரிக்க.

வழிமுறைகள்

 1. தேங்காய்யை 1 கப் தண்ணீர் விட்டு முதல் பாலை எடுக்க வேண்டும்.
 2. மிக்ஸில் மாம்பழ துண்டுகளை கூழ் ஆக்கி கொள்ளவேண்டும்.
 3. 3/4 தேக்கரண்டி ஜெலட்டின், சுடு தண்ணீர் விட்டு ப்ளூம் ஆக விட வேண்டும்.
 4. 1/4 கப் கிரீம், பாதி சர்க்கரை, பாதி தேங்காய் பால் கலந்து குறைந்த தணலில் சூடாக்க வேண்டும். பின் ப்ளூம் ஆனா ஜெலட்டினை அதில் நன்கு கலக்க வேண்டும். காஸ் ஸ்டவ் அமத்தி விட வேண்டும்.
 5. இக்கலவையை ஒரு கிளாஸ் டம்ளர் இல் பாதி சாய்ந்த வாட்டில் நிரப்பவேண்டும்.
 6. இதை குளிர்பானப்பெட்டியில் வைக்க வேண்டும். ஒரு மணி நேரம் செட் ஆக வேண்டும்.
 7. மீதி கிரீம், சர்க்கரை, தேங்காய் பால் மற்றும் மாம்பழ கூழ் ஆகியவற்றை ஒன்றாக கலந்து சூடாக்க வேண்டும் . கொதிக்க வைக்க கூடாது. பின் மீதி உள்ள ஜெலட்டினை ப்ளூம் செய்து இக் கலவையில் நன்கு கலக்க வேண்டும்.
 8. ஜெலட்டின் கரையும் வரை கலக்க வேண்டும்.
 9. பின் இக் கலவையை குளிர்பானப்பெட்டியில் உள்ள டம்ளர் இல் இன்ன ஒரு பக்க வாட்டில் நிறப்பவேண்டும். பின் குளிர்பான பெட்டியில் 2 மணி நேர வைத்து செட் செய்ய வேண்டும்.
 10. பரிமாறும் முன் தேங்காய் துருவல், செர்ரி மற்றும் புதினா இலை கொண்டு அலங்கரிக்க வேண்டும்.
 11. இத்தாலியன் பனக்கோட்ட தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்