தேங்காய் முருங்கை புலவ் | MORINGA PULAO in Tamil

எழுதியவர் இராஜபுஷ்பா   |  12th Oct 2017  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • MORINGA PULAO recipe in Tamil,தேங்காய் முருங்கை புலவ், இராஜபுஷ்பா
தேங்காய் முருங்கை புலவ்இராஜபுஷ்பா
 • ஆயத்த நேரம்

  15

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  3

  மக்கள்

2

0

தேங்காய் முருங்கை புலவ் recipe

தேங்காய் முருங்கை புலவ் தேவையான பொருட்கள் ( Ingredients to make MORINGA PULAO in Tamil )

 • தேங்காய் 1/2 மூடி
 • பாசுமதி அரிசி ஒரு கப்
 • முருங்கை கீரை ஒரு கப்
 • பல்லாரி வெங்காயம் 1
 • முந்திரி 10
 • பூண்டு பல் 3
 • இஞ்சி சிறு துண்டு
 • பட்டை ஒரு துண்டு
 • கிராம்பு ஏலம் தலா 3
 • அன்னாசிப்பூ 2
 • பிரிஞ்சி இலை- 1
 • ஜாதிபத்திரி சிறிது
 • பனங்கற்கண்டு 2 தேக்கரண்டி
 • நெய் 3 தேக்கரண்டி
 • தேங்காய் எண்ணெய் 1 தேக்கரண்டி
 • பச்ச மிளகாய் 2
 • உப்பு தேவையான அளவு

தேங்காய் முருங்கை புலவ் செய்வது எப்படி | How to make MORINGA PULAO in Tamil

 1. தேங்காய் துருவி பால் எடுத்துக்கொள்ளவும்.
 2. முருங்கை கீரை யில் இரண்டு கப் தண்ணீர் இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து ஒரு கப் வரும்வரை கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ளவும்
 3. பல்லாரியை நறுக்கி தேங்காய் எண்ணெயில் முறுகலாக வறுத்து கொள்ளவும்
 4. பாசுமதி அரிசியை அலசி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்
 5. வாணலியில் நெய் விட்டு பட்டை கிராம்பு ஏலம் ஜாதி பத்ரி அன்னாசிப்பூ பிரிஞ்சி இலை சேர்த்து தாளித்து துருவிய இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
 6. வறுத்த முந்திரி பாசுமதிஅரிசி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும் இறக்கவும்.
 7. ஒரு கப் அரிசிக்கு ஒன்றேகால் கப் அளவில் சம அளவு முருங்கை சாறும் தேங்காய் பாலும் எடுத்துக்கொள்ளவும்.
 8. இவற்றை குக்கருக்கு மாற்றி தேவையான அளவு பனங்கற்கண்டு உப்பு சேர்த்து ஒரு விசில் வந்ததும் பத்து நிமிடம் குறைந்த தீயில் வைத்து இறக்கவும். வறுத்த பல்லாரியை தூவி பரிமாறவும்.

எனது டிப்:

கீரை பிடிக்காத குழந்தைகளுக்கு மிகவும் ஏற்ற உணவு, இரத்த சோகையை போக்கும் சுவையான சத்தான புலவ்

Reviews for MORINGA PULAO in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.