Photo of Fish Satay by Sujata Limbu at BetterButter
4367
77
0.0(0)
0

மீன் சட்டே

Dec-28-2015
Sujata Limbu
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தாய்
  • கிரில்லிங்
  • அப்பிடைசர்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. 400 கிராம் மீன் துண்டுகள், எலும்பில்லாதது
  2. 200 கிராம் இறால், தோல் உரிக்கப்பட்டது
  3. 2 பிரிஞ்சி இலை
  4. 6 காஃபிர் எலுமிச்சை இலை
  5. ½ தேக்கரண்டி கருமிளகு, அரைத்தது
  6. 1 தேக்கரண்டி புளி, வெந்நீரில் ஊறவைத்தது
  7. 1 தேக்கரண்டி பழுப்பு சர்க்கரை
  8. 1 தேக்கரண்டி உப்பு
  9. 2 தேக்கரண்டி சமையல் எண்ணெய்
  10. 16 துண்டுகள் லெமென் கிராஸ் (ஸ்க்யூவராகப் பயன்படுத்துவதற்கு)
  11. அரைப்பதற்குரிய பொருள்கள்:
  12. 4 பூண்டு பல்
  13. 1 நடுத்தர அளவுள்ள வெங்காயம், பொடியாக நறுக்கியது
  14. 1 செமீ துண்டு இஞ்சி
  15. 1 சிறிய அளவிலான தக்காளி, பொடியாக நறுக்கியது
  16. 4 உலர் சிவப்பு மிளகாய்

வழிமுறைகள்

  1. இறாலையும் மீனையும் கழுவி நன்றாக நறுக்கிக்கொள்ளவும் அல்லது ஒன்றாக அரைத்துக்கொள்ளவும். எடுத்து வைத்துக்கொள்ளவும். 'அரைப்பதற்குரிய பொருள்களின்' கீழ் பட்டியலிடப்பட்ட பொருள்கைள அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தை எடுத்து எண்ணெயை ஊற்றி, அரைத்தக் கலவையைச் சேர்த்து கலக்கிக்கொள்ளவும். அதன்பின்னர், எலுமிச்சை இலைகள், பிரிஞ்சி இலைகள், புளித்தண்ணீர் சேர்த்து அழகிய நறுமணம் வரும்வரை சமைக்கவும்.
  3. அடுத்து, உப்பு, கருமிளக, பழுப்பு சர்க்கரை ஆகியவற்றை ஒன்றாகக் கலந்துகொள்ளவும். கலக்கி 2-3 நிமிடங்கள் வேகவைக்கவும்.
  4. அடுப்பிலிருந்து பாத்திரத்தை இறக்கவும். சிறிது நேரம் ஆறட்டும், அதன்பின்னர் மீனையும் இறாலையும் இந்த மசாலாக் கலவையில் சேர்த்து நன்றாகக் கலக்கிக்கொள்ளவும்.
  5. 2 தேக்கரண்டி சட்டே இறைச்சையினை உங்கள் கைகளில் எடுத்து, லெமென்கிராசை மையத்தில் வைத்து மெதுவாக இறைச்சியை உங்கள் கைகளால் மூடவும். இதே செயல்முறையை அனைத்து மற்ற லெமன் கிராஸ் ஸ்க்யூவர்களுக்கும் மேற்கொண்டு எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  6. ஒரு கிரில்லை அல்லது நான் ஸ்டிக் கிரில்லிங் பாத்திரத்தை மிதமானதில் இருந்து உயர் தீக்குச் சூடுபடுத்திக்கொள்ளவும். கொாஞ்சம் எண்ணெயை அதன் மீது தூவி மீன் சட்டேயை வைத்து ஒவ்வொரு பக்கத்தையும் 2-3 நிமிடங்கள் வேகவைக்கவும்.
  7. சட்டேக்கள் வெந்ததும் கொஞ்சம் டிப்பிங் சாசை பக்கத்தில் வைத்து சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்