வீடு / சமையல் குறிப்பு / Carrot egg stir fry

Photo of Carrot egg stir fry by Asiya Omar at BetterButter
1
5
5(1)
0

Carrot egg stir fry

Oct-17-2017
Asiya Omar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • మీడియం/మధ్యస్థ
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • మితముగా వేయించుట
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கேரட் - 2 மீடியம் சைஸ்
  2. முட்டை -1
  3. நறுக்கிய வெங்காயம் -1
  4. பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கியது 2
  5. மஞ்சள், சீரகத்தூள் - தலா கால் டீஸ்பூன்
  6. மிளகுத்தூள் - சிறிது
  7. எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
  8. கடுகு, உ.பருப்பு - தலா அரைடீஸ்பூன்
  9. கிள்ளிய வற்றல் -1
  10. கறிவேப்பிலை - 2 இணுக்கு
  11. தேங்காய்த் துருவல் -2 டேபிள்ஸ்பூன்
  12. உப்பு - தேவைக்கு
  13. நறுக்கிய மல்லி இலை - சிறிது.

வழிமுறைகள்

  1. கேரட் வெங்காயம் , பச்சை மிளகாய், மல்லி இலை பொடியாக நறுக்கி வைக்கவும். முட்டையை சிறிது பின்ச் உப்பு, மிளகு சேர்த்து அடித்து வைக்கவும்.
  2. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உ.பருப்பு, வற்றல், கறிவேப்பிலை தாளிக்கவும். வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கவும். நறுக்கிய கேரட் சேர்க்கவும். மஞ்சள், சீரகத்தூள் சேர்க்கவும். நன்கு பிரட்டவும். உப்பு சுவைக்கு சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து மூட போட்டு வேக விடவும்.
  3. கேரட் வெந்தவுடன் அடித்து வைத்த முட்டையை சேர்த்து சிம்மில் வைத்து வேக விடவும். முட்டை வெந்து வந்தவுடன் தேங்காய்த்துருவல் சேர்க்கவும்.பிரட்டவும்.மல்லி இலை தூவி அடுப்பை அணைக்கவும்.
  4. சுவையான கேரட் முட்டைப்பொரியல் தயார். சாதம் சப்பாத்தியுடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Maanika Hoon
Oct-17-2017
Maanika Hoon   Oct-17-2017

Nice combination of carrot and Egg

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்