Photo of Melapalayam thakkadi by Munsila Fathima at BetterButter
3082
2
0.0(1)
0

Melapalayam thakkadi

Oct-24-2017
Munsila Fathima
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • கடினம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வறுத்த புட்டு மாவு- 300 கிராம்
  2. தண்ணீர்- 1: 4
  3. மட்டன்- 250 கிராம்
  4. தேங்காய்- 3 துண்டு
  5. இஞ்சி பூண்டு விழுது- 1 மேஜைக்கரண்டி
  6. வெங்காயம்- 2
  7. தக்காளி-1
  8. பச்சை மிளகாய்- 3
  9. உப்பு- தேவையான அளவு
  10. மிளகாய் தூள்- 1/2 தேக்கரண்டி
  11. மசாலா- 1 1/2 மேஜைக்கரண்டி (மல்லி - 500gm, சிவப்பு மிளகாய், மஞ்சள், சீரகம்- 100 கிராம் , சோம்பு- 25 கிராம் திரித்தது)
  12. மல்லி இலை- கொஞ்சம்
  13. புதினா- கொஞ்சம்
  14. தயிர்- 1 தேக்கரண்டி
  15. பட்டை, கிராம்பு- பின்ச்

வழிமுறைகள்

  1. குக்கரில் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடேறியதும் பட்டை, கிராம்பு சேர்க்கவும்.
  2. அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. வதங்கும் வெங்காயத்தில் பச்சை மிளகாய், உப்பு , இஞ்சி பூண்டு விழுது சேர்க்கக்வும்.
  4. வெங்காயம் வதங்கியதும் தக்காளி , புதினா, மல்லி இலை, மிளகாய் தூள் சேர்க்கவும்
  5. வதங்கிய தக்காளி உடன் மட்டனை சேர்த்து பிரட்டவும்.
  6. அதனுடன் மசாலா, தயிர், சேர்க்கவும்.
  7. அதனுடன் தண்ணீர் சேர்த்து மட்டனை 75% வேக வைக்கவும் (நான் கூறிய அளவில் 1(1/2 ) பங்கு தண்ணீரை இதில் சேர்க்கவும்)
  8. மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம்(1), பச்சை மிளகாய், மல்லி இலை, துருவிய தேங்காய் சேர்க்கவும்
  9. மட்டன் வெந்ததும் அந்த மட்டன் மசாலா தண்ணீரை மாவுடன் சேர்த்து கொழுக்கட்டை பிடிக்கும் பதத்திற்கு சூடாக ஊற்றி 2 நிமிடம் கிளருங்கள்.
  10. தண்ணீர் சூற்றுடன் கொள்ளுக்கட்டையை பிடிக்க வேண்டும்.
  11. மீதமுள்ள 21/2 பங்கு தண்ணீருடன் வேக வைத்த மட்டன் கலவையை சேர்த்து வேறு வாணலியில் நன்கு கொதிக்க விடுங்கள்.
  12. தண்ணீர் நன்கு கொதிக்கும் போது பிடித்த கொள்ளுக்கட்டையை மெதுவாக சேருங்கள்.
  13. கொழுக்கட்டை உடையாமலும், கரையாமலும் இருப்பது தான் இதில் முக்கியம்.
  14. 35 நிமிடம் வேகா விடுங்கள். இடை இடையே வாணலியை ரோடேட் செய்து கொள்ளுங்கள். கரண்டி வைத்து கிளறினால் கொழுக்கட்டை உடைந்து விடும்.
  15. முடிந்ததும் 10 நிமிடத்தில் கூட்டு இறுகி விடும்.
  16. சுவையான தக்கடி ரெடி!

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Oct-24-2017
Pushpa Taroor   Oct-24-2017

Very good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்