வீடு / சமையல் குறிப்பு / Kongu style country chicken fry

Photo of Kongu style country chicken fry by Karuna pooja at BetterButter
224
9
0.0(2)
0

Kongu style country chicken fry

Oct-24-2017
Karuna pooja
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • நான் வெஜ்
 • மீடியம்
 • மற்றவர்கள்
 • தமிழ்நாடு
 • பான் பிரை
 • சைட் டிஷ்கள்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. நாட்டுக்கோழி 3/4 கிலோ
 2. நல்லெண்ணெய் 2 ஸ்பூன்
 3. சின்ன வெங்காயம் 150 கிராம்
 4. தக்காளி 100 கிராம்
 5. மல்லி விதை 25 கிராம்
 6. வரமிளகய் 5
 7. மிளகு 15 கிராம்
 8. சீரகம் 15 கிராம்
 9. சோம்பு 1 ½ ஸ்பூன்
 10. பட்டை சிறிய துண்டு
 11. கிராம்பு 3
 12. ஏலக்காய் 3
 13. கசகசா 1 ஸ்பூன்
 14. பூண்டு 20 கிராம்
 15. இஞ்சி 15 கிராம்
 16. மஞ்சள் பொடி சிறிது
 17. கருவேப்பிலை சிறிது
 18. மல்லி இலை சிறிது

வழிமுறைகள்

 1. சுத்தம் செய்த நாட்டுக்கோழியை மஞ்சள் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வேகவிடவும்.
 2. சிறிது எண்ணெயில் மல்லி விதை , வரமிளகாய் , மிளகு , சோம்பு, சீரகம் , பட்டை ,கிராம்பு ,ஏலக்காய் இறுதியாக கசகசா போன்ற வற்றையும் வறுக்கவும் .
 3. சின்ன வெங்காயம் , தக்காளி சேர்த்து வதக்கவும் .
 4. இவை ஆறியதும் மிக்ஸியில் அரைக்கவும்.
 5. கறி நன்கு வெந்தும் அரைத்த மசாலா சேர்த்து மூடி மிதமான தீயில் வேகவிடவும் .
 6. மசாலா பச்சை வாசனை போனதும் உப்பு சேர்க்கவும்.
 7. வாணலியில் நல்லெண்ணெய் 2 ஸ்பூன் , சோம்பு ½ ஸ்பூன், நறுக்கிய பூண்டு, கருவேப்பிலை .இவற்றை சேர்க்க.
 8. தாளிப்பு சேர்த்து 5 நிமிடங்கள் விட்டு நன்கு வறுவல் போன்று வந்த பின் மல்லி இலை சேர்க்கவும் ....
 9. கொங்குநாட்டுக் கோழி வறுத்த கறி தயார் .
 10. இது எனது பாட்டியின் சமையல் , அவர் அடுத்த நாள் வைத்து சாப்பிடுவதற்காக தேங்காய் சேர்க்க வில்லை. நீங்கள் விரும்பினால் தேங்காய் சேர்க்கலாம்.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Menaga Sathia
Oct-24-2017
Menaga Sathia   Oct-24-2017

அருமை

Pushpa Taroor
Oct-24-2017
Pushpa Taroor   Oct-24-2017

Good

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்