வீடு / சமையல் குறிப்பு / முந்திரி கொத்து

Photo of Munthiri Kothu by Ayesha Ziana at BetterButter
769
8
0.0(0)
0

முந்திரி கொத்து

Oct-24-2017
Ayesha Ziana
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

முந்திரி கொத்து செய்முறை பற்றி

கன்னியாகுமரி மாவட்டத்தில் செய்யப்படும் சுவையான பண்டிகை கால பலகாரம்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • ஃபிரையிங்
  • ஸாட்டிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சிறு பயறு 1/2 கப்
  2. வெள்ளை உளுந்து 1/4 கப்
  3. புழுங்கல் அரிசி 1/4 கப்
  4. ஏலக்காய் 4
  5. துருவிய தேங்காய் 1 கப்
  6. கருப்பு எள் 2 ஸ்பூன்
  7. வெல்லம் 1 கப் அல்லது சற்று குறைவாக
  8. தண்ணீர் தேவைக்கு
  9. பச்சரிசி 1/4 கப்
  10. முட்டை 1/4
  11. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  12. உப்பு தேவைக்கு
  13. கடலை எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. சிறுபயறு, உளுந்து, புழுங்கல் அரிசி, துருவிய தேங்காய், இவை அனைத்தையும் நன்றாக வறுக்கவும். ஏலக்காய், கருப்பு எள் இவற்றை லேசாக வறுக்கவும்.
  2. எள்ளைத் தவிர வறுத்த மற்ற அனைத்தையும் கொரகொரப்பாக பொடிக்கவும். பொடித்த பின் கறுப்பு எள்ளைச் சேர்த்து கலந்து வைக்கவும்.
  3. ஒரு வாணலியில் வெல்லம் சேர்த்து மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, நன்றாக கொதிக்க வைக்கவும். பின்னர் வடிகட்டி, மீண்டும் ஓட்டும் பதம் வரும் வரை பாகு காய்ச்சவும். கம்பி பதம் தேவையில்லை.
  4. கலந்து வைத்த பொடியைக் கொஞ்சம் கொஞ்சமாக பாகில் ஊற்றி கிண்டவும். அடுப்பை அணைக்கவும்.
  5. பின்னர் கையில் நெய் தடவி, கலவை சூடாக இருக்கும் போதே உருண்டைகள் பிடிக்கவும். உருண்டைகளை குறைந்தது 1 மணி நேரம் ஆற விடவும். அதற்குள் நன்றாக இறுகி விடும். இந்த உருண்டைகளை அப்படியே கூட குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம். அருமையாக இருக்கும்.
  6. இனி மேல்மாவு செய்ய வேண்டும். அதற்கு, முதலில், 2-3 மணி நேரம் ஊற வைத்த பச்சரிசியை நன்றாக அரைக்கவும்.
  7. முட்டையை நன்றாக அடித்து பச்சரிசி மாவில் சேர்க்கவும். பின்னர், உப்பு, மஞ்சள் தூளும் சேர்த்து நன்றாக கலக்கவும். கொஞ்சம் திக்காக இருப்பது முக்கியம். உருண்டைகளைத் தோய்த்தால் நன்றாக ஓட்ட வேண்டும். அது தான் சரியான பதம். தேவைப்பட்டால் சிறிது அரிசி மாவும் சேர்க்கலாம். மேல்மாவு தயார்.
  8. இனி, அடுப்பில் எண்ணெய் காய வைத்து, உருண்டைகளை மேல் மாவில் முக்கி பொரித்து எடுக்கவும். ஆறியதும் டப்பாவில் போட்டு வைத்தால் ஒன்றிரண்டு மாதங்கள் வரை கெடாது. அருமையான முந்திரி கொத்து தயார்.
  9. இது கன்னியாகுமரி மாவட்டத்தின் ஸ்பெஷல் உணவாகும். பண்டைய காலம் முதல் இப்போது வரை, குறிப்பாக முஸ்லிம்கள் திருமண விசேஷங்களுக்கு அதிக அளவில் செய்வார்கள்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்