உருண்டை குழம்பு | Urundai kuzhambu in Tamil

எழுதியவர் Krishnasamy Vidya Valli  |  24th Oct 2017  |  
4 from 2 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Urundai kuzhambu recipe in Tamil,உருண்டை குழம்பு, Krishnasamy Vidya Valli
உருண்டை குழம்புKrishnasamy Vidya Valli
 • ஆயத்த நேரம்

  30

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  40

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

6

2

உருண்டை குழம்பு recipe

உருண்டை குழம்பு தேவையான பொருட்கள் ( Ingredients to make Urundai kuzhambu in Tamil )

 • துவரம்பருப்பு - 1 / 2 கப்
 • கடலைப்பருப்பு - 1 / 2 கப்
 • மிளகாய் வத்தல் - 2
 • பச்சைமிளகாய் - 1
 • உப்பு - 1 1 / 4 தேக்கரண்டி
 • பெருங்காயம் - 2 சிட்டிகை
 • புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு
 • சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
 • மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
 • கடுகு - 2 தேக்கரண்டி
 • உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
 • கருவேப்பிலை - 4 ஆர்க்கு
 • தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
 • சமையல் எண்ணெய் - 2 தேக்கரண்டி
 • கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது - 1 தேக்கரண்டி

உருண்டை குழம்பு செய்வது எப்படி | How to make Urundai kuzhambu in Tamil

 1. துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய் வத்தல் சேர்த்து அரைமணிநேரம் ஊறவைக்கவும்
 2. Mixi-ல் 1/2 தேக்கரண்டி உப்பு, பச்சைமிளகாய் ஒரு சிட்டிகை பெருங்காயம் ஊறவைத்த பருப்பு மிளகாய்வத்தல் சேர்த்து நன்றாக அரைக்கவும்
 3. ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் மற்றும் சமையல் எண்ணெய் 2 தேக்கரண்டி விட்டு கொடுக்கப்பட்ட அளவில் பாதி அளவு கடுகு, உளுத்தம்பருப்பு கருவேப்பிலை தாளிக்கவும்
 4. அரைத்த விழுதை சேர்த்து சுருள கிளறவும்
 5. கிளறியதை சிறிது நேரம் ஆற விடவும் ஆறியதும் சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
 6. அடி கனமான பாத்திரத்தில் புளியை நல்ல நீர்க்க கரைத்து விட்டு மீதமுள்ள உப்பு மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்கவிடவும். பச்ச வாசனை போனவுடன் சாம்பார் பொடி ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்க்கவும்.
 7. ஒரு கொதி வந்தவுடன் உருண்டைகளை ஒவ்வொன்றாக சேர்க்கவும். அடுப்பை சிம்மில் வைத்துக்கொள்ளலாம்.
 8. உருண்டைகளை சேர்த்தவுடன் கிளறக்கூடாது.
 9. ஒரு கொதி வந்தவுடன் லேசாக உருண்டைகளை கிளறி கொடுக்கலாம். உருண்டை நிறம் மாறியதும் தேங்காய் எண்ணெய்யில் கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை தாளித்து கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். அருமையான உருண்டை குழம்பு தயார்

எனது டிப்:

உருண்டை கலையும் என நினைத்தால் அரிசி/ கடலை மாவில் சிறிது பிரட்டி எடுத்தபின் குழம்பில் சேர்க்கவும்

Reviews for Urundai kuzhambu in tamil (2)

Pushpa Taroora year ago

Ok
Reply
Krishnasamy Vidya Valli
a year ago
Thank you so much
Krishnasamy Vidya Valli
a year ago
thanks ma

Mani Iyera year ago

Fantastic preparation. Nice & tasty..
Reply
Krishnasamy Vidya Valli
a year ago
Thank you so much
Krishnasamy Vidya Valli
a year ago
Thankyou sir