BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Urundai kuzhambu

Photo of Urundai kuzhambu by Krishnasamy Vidya Valli at BetterButter
0
5
4(2)
0

Urundai kuzhambu

Oct-24-2017
Krishnasamy Vidya Valli
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • మీడియం/మధ్యస్థ
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • ఉడికించాలి
  • సైడ్ డిషెస్
  • తక్కువ కొవ్వు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. துவரம்பருப்பு - 1 / 2 கப்
  2. கடலைப்பருப்பு - 1 / 2 கப்
  3. மிளகாய் வத்தல் - 2
  4. பச்சைமிளகாய் - 1
  5. உப்பு - 1 1 / 4 தேக்கரண்டி
  6. பெருங்காயம் - 2 சிட்டிகை
  7. புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு
  8. சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
  9. மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
  10. கடுகு - 2 தேக்கரண்டி
  11. உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
  12. கருவேப்பிலை - 4 ஆர்க்கு
  13. தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
  14. சமையல் எண்ணெய் - 2 தேக்கரண்டி
  15. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது - 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய் வத்தல் சேர்த்து அரைமணிநேரம் ஊறவைக்கவும்
  2. Mixi-ல் 1/2 தேக்கரண்டி உப்பு, பச்சைமிளகாய் ஒரு சிட்டிகை பெருங்காயம் ஊறவைத்த பருப்பு மிளகாய்வத்தல் சேர்த்து நன்றாக அரைக்கவும்
  3. ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் மற்றும் சமையல் எண்ணெய் 2 தேக்கரண்டி விட்டு கொடுக்கப்பட்ட அளவில் பாதி அளவு கடுகு, உளுத்தம்பருப்பு கருவேப்பிலை தாளிக்கவும்
  4. அரைத்த விழுதை சேர்த்து சுருள கிளறவும்
  5. கிளறியதை சிறிது நேரம் ஆற விடவும் ஆறியதும் சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
  6. அடி கனமான பாத்திரத்தில் புளியை நல்ல நீர்க்க கரைத்து விட்டு மீதமுள்ள உப்பு மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்கவிடவும். பச்ச வாசனை போனவுடன் சாம்பார் பொடி ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்க்கவும்.
  7. ஒரு கொதி வந்தவுடன் உருண்டைகளை ஒவ்வொன்றாக சேர்க்கவும். அடுப்பை சிம்மில் வைத்துக்கொள்ளலாம்.
  8. உருண்டைகளை சேர்த்தவுடன் கிளறக்கூடாது.
  9. ஒரு கொதி வந்தவுடன் லேசாக உருண்டைகளை கிளறி கொடுக்கலாம். உருண்டை நிறம் மாறியதும் தேங்காய் எண்ணெய்யில் கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை தாளித்து கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். அருமையான உருண்டை குழம்பு தயார்

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Oct-24-2017
Pushpa Taroor   Oct-24-2017

Ok

Mani Iyer
Oct-24-2017
Mani Iyer   Oct-24-2017

Fantastic preparation. Nice & tasty..

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்