வீடு / சமையல் குறிப்பு / கோதுமை ரவை இறைச்சி உப்புமா

Photo of Wheat Rava Meat Upma by Ayesha Ziana at BetterButter
826
6
0.0(0)
0

கோதுமை ரவை இறைச்சி உப்புமா

Oct-24-2017
Ayesha Ziana
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கோதுமை ரவை இறைச்சி உப்புமா செய்முறை பற்றி

கோதுமை ரவை, மட்டன் கறி சேர்த்து செய்த உப்புமா. இது கன்னியாகுமரி ஸ்பெஷல் இஸ்லாமிய திருமண வைபவ காலை உணவாகும்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பின் வருபவை உப்புமா செய்ய: கோதுமை ரவை 1 கப்
  2. வெங்காயம் 1
  3. தக்காளி 1
  4. பச்சை மிளகாய் 1
  5. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  6. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  8. பெருஞ்சீரகத்தூள் 1 ஸ்பூன்
  9. மல்லித்தூள் 1 ஸ்பூன்
  10. கிராம்பு 2
  11. பட்டை 1
  12. ஏலம் 2
  13. கறிவேப்பிலை 1 கொத்து
  14. தேங்காய் துருவல் 3 டேபிள் ஸ்பூன்
  15. மல்லித்தழை தேவைக்கு
  16. அண்டி, கிஸ்மிஸ் ஒரு கையளவு
  17. எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
  18. நெய் 1 1/2 டேபிள் ஸ்பூன்
  19. உப்பு தேவைக்கு
  20. தண்ணீர் தேவைக்கு
  21. பின் வருபவை மட்டன் கறி செய்ய: வெங்காயம் 1
  22. மட்டன் 250 கிராம்
  23. தக்காளி 1
  24. பச்சை மிளகாய் 1
  25. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  26. கிராம்பு 3
  27. பட்டை 1
  28. ஏலம் 3
  29. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  30. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  31. மல்லி தூள் 1 1/2 ஸ்பூன்
  32. பெருஞ்சீரகத் தூள் 1 ஸ்பூன்
  33. மல்லித்தழை தேவைக்கு
  34. உப்பு தேவைக்கு
  35. எண்ணெய் தேவைக்கு

வழிமுறைகள்

  1. மட்டன் கறி செய்ய: குக்கரில் எண்ணெய் ஊற்றி கிராம்பு பட்டை ஏலம் சேர்த்து தாளிக்கவும். பின், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, எல்லாம் ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும்.
  2. பின்னர் மட்டன், உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து கொதித்ததும் மசாலா பவுடர்கள் சேர்த்து, பின் மல்லித்தழை சேர்த்து குக்கரை மூடி வைத்து 8 விசில் வேக வைக்கவும். மட்டன் கறி தயார். (மட்டனுக்கு பதிலாக சிக்கன், பீப் வைத்தும் செய்யலாம்).
  3. உப்புமா செய்ய: கடாயில் எண்ணெய் ஊற்றி, கிராம்பு பட்டை ஏலம் சேர்த்து தாளிக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
  4. பின், மட்டன் கறியில் உள்ள பீஸ்களை தனியே எடுத்து வைத்து விட்டு, சால்னா மற்றும் தண்ணீரை அளந்து கடாயில் சேர்க்கவும். சால்னா, தண்ணீர் சேர்த்து 2 கப் வர வேண்டும்.
  5. பின்னர் கொதித்ததும், மசாலா பவுடர்கள், உப்பு, கறிவேப்பிலை, துருவிய தேங்காய் சேர்த்து, பின் கொஞ்சம் கொஞ்சமாக ரவையைச் சேர்த்து கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும் (மட்டன் கறியின் காரத்திற்கு ஏற்ப உப்புமாவில் மசாலா சேர்க்கவும். அதனால் தான் அளவு கொடுக்கவில்லை.)
  6. தண்ணீர் வற்றியதும், மட்டன் பீஸ்களைச் சேர்த்து நன்றாக கிளறவும். பின்னர், மல்லித்தழை, 1/2 டேபிள் ஸ்பூன் நெய்யில் வறுத்த அண்டி கிஸ்மிஸ் சேர்த்து மீண்டும் கிளறவும். இறுதியாக 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி கிளறி அடுப்பை அணைத்து விடவும். சூப்பரான கோதுமை ரவை இறைச்சி உப்புமா தயார். இதனுடன் வாழைப்பழம் அல்லது ரைத்தா, மற்றும் இஞ்சி டீ வைத்து பரிமாறுவார்கள்.
  7. இது கன்னியாகுமரி மாவட்டத்தில் காலங்காலமாக இசுலாமிய திருமணங்களில் காலை உணவாகப் பரிமாறப்படும் உணவாகும். வீடுகளிலும் அதிகம் செய்வார்கள்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்