Photo of Achappam by Margaret Charles at BetterButter
872
4
0.0(0)
0

அச்சப்பம்

Oct-24-2017
Margaret Charles
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

அச்சப்பம் செய்முறை பற்றி

கிறிஸ்மஸ் என்றால் என் நினைவிற்க்கு வருவது இதுதூன்! தேங்காய் பிடித்தவர்கள் இதை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • பண்டிகை கொண்டாட்டம்
  • நான் வெஜ்
  • மீடியம்
  • கிறிஸ்துமஸ்
  • கேரளா
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. அரிசி மாவு 1/2 கிலோ
  2. தேங்காய் பால் (1 ஆம் பால்) 1 கப்
  3. சர்க்கரை 150 கிராம்
  4. முட்டை 2
  5. உப்பு ஒரு சிட்டிகை
  6. தேங்காய் எண்ணெய் - பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. ஒரு அகண்ட பாத்திரத்தில் அரிசி மாவு, உப்பு, சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
  2. 2 முட்டைகளை நன்றாக அடித்து மாவில் கலக்கவும்
  3. தேங்காய் பாலை ஊற்றி நன்றாக கலக்கவும்
  4. எல்லாம் கலந்த பின் மாவு ஊற்றும் பதத்தில் இருக்க வேண்டும். மாவு அதிகமாக நீர்த்தால் அப்பம் அச்சினில் ஒட்டாது
  5. ஒரு கனமான சட்டியில் தேங்காய் எண்ணெய் பொரிப்பதற்கு எற்றவாறு ஊற்றவும்
  6. எண்ணெய் சூடானதும் அச்சை அதில் வைத்து சூடேற்றவும்
  7. சூடான அச்சை மாவில் முக்கால் அளவு முங்கும் வரை இரக்கவும்
  8. இரண்டு வினாடிகள் கழித்து எடுத்து எண்ணெயில் வைக்கவும்
  9. சில நொடிகளில் அச்சை விட்டு கழன்று அப்பம் எண்ணெயில் விழும்
  10. இளம் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்
  11. இதனை முட்டை இல்லாலும் செய்யலாம். கூடுதல் தேங்காய் பால் சேர்க்க வேண்டும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்