வீடு / சமையல் குறிப்பு / South tamilnadu ennai kathirikkai

Photo of South tamilnadu  ennai kathirikkai by Krishnasamy Vidya Valli at BetterButter
600
5
0.0(2)
0

South tamilnadu ennai kathirikkai

Oct-24-2017
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ரோசஸ்டிங்
  • சைட் டிஷ்கள்
  • க்ளூட்டன் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பொடி பிஞ்சு கத்தரிக்காய் 15 முதல் 20
  2. புளி - ஒரு சிறிய துண்டு
  3. உப்பு - 1 1 / 2 தேக்கரண்டி
  4. மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
  5. கட்டிப்பெருங்காயம் - 1 சிறிய துண்டு
  6. கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
  7. உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
  8. கொத்தமல்லி விதை - 1/2 தேக்கரண்டி
  9. மிளகாய் வத்தல் - 8
  10. தேங்காஎண்ணெய்/ சமையல்எண்ணெய் - 4 தேக்கரண்டி
  11. கடுகு - 1 தேக்கரண்டி
  12. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வத்தல் கொத்தமல்லி விதை, பெருங்காயம் சேர்த்து சிவக்க வறுக்கவும்
  2. வறுத்ததை 3/4 தேக்கரண்டி உப்பு சேர்த்து மிக்ஸியிலிட்டு கரகரப்பாக திரிக்கவும்
  3. கத்தரிக்காயைச் காம்பை நீக்கி விட்டு அடிபுறத்தில் நான்காக கீறிக்கொள்ளவும் . தனி துண்டுகளாக நறுக்கக்கூடாது. முழுதாகவும் இருக்க வேண்டும் நான்காக வகுந்தும் இருக்க வேண்டும்
  4. கடாயில் புளியை நீர்க கரைத்து 3/4 தேக்கரண்டி உப்பு மஞ்சள் பொடி சேர்த்து ஒரு கொதிவிடவும்
  5. கீறிய கத்தரிக்காயைச் சேர்த்து இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் வரை மூடி அடுப்பில்வைக்கவும்
  6. கத்தரிக்காய் குழைய கூடாது . ஆனால் பாதிக்கு மேல் வெந்திருக்க வேண்டும்
  7. வெந்த கத்தரிக்காயை தண்ணீர் இல்லாமல் எடுத்து ஆற விடவும்
  8. மிக்ஸியில் பொடி செய்ததை கத்தரிக்காயின் கீறிய பகுதியை பிரித்து அடைத்து பின் சேர்த்து ஒரு தட்டில் தனியாக வைக்கவும்
  9. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு தாளிக்கவும்.
  10. ஒவ்வொரு கத்தரிக்காயாக கடாயில் அடுக்கி சிறிது நேரம் கழித்து கிளறவும். அடுப்பை சிம்மில் வைத்து கொள்ளவும் . இரும்பு கடாயில் நன்றாக வரும். சீக்கிரமே செயயய்யலாம் முறுமுறு என்றும் இருக்கும்
  11. கத்தரிக்காய் எண்ணெய்யில் நன்றாக பொரிந்து முறுமுறு என்று ஆனதும் அடுப்பை அணைத்து விடவும்.
  12. சுவையான எண்ணெய் கத்திரிக்காய் தயார். மோர்க்குழம்புடன் சாப்பிடலாம். தயிர் சாதத்திற்கும் தொட்டுக்கொள்ளலாம்

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Oct-24-2017
Pushpa Taroor   Oct-24-2017

Liked it

Mani Iyer
Oct-24-2017
Mani Iyer   Oct-24-2017

Verrrrrry tasty side dish. Nice preparation

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்