Photo of Chukkappam by Ayesha Ziana at BetterButter
1974
4
0.0(0)
0

சுக்கப்பம்

Oct-24-2017
Ayesha Ziana
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சுக்கப்பம் செய்முறை பற்றி

கேரளா மற்றும் கன்னியாகுமரி இசுலாமியர்களின் பாரம்பரியமான பண்டிகை கால பண்டம்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • ஈத்
  • கேரளா
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. இடியாப்ப மாவு 1 கப்
  2. தேங்காய் தலை பால் 1/2 கப்கு சற்று குறைவாக
  3. தேங்காய் 2 ஆம் பால் 1/2 கப்
  4. உப்பு தேவைக்கு
  5. கறிவேப்பிலை 1 கொத்து
  6. கடலை எண்ணெய் பொரிக்க
  7. பின் வருபவற்றை அரைக்கவும்: வற்றல் மிளகாய் 2.5
  8. பச்சை மிளகாய் 1
  9. முழு மல்லி 1/4 ஸ்பூன்
  10. முழு பெருஞ்சீரகம் 1/2 ஸ்பூன்
  11. இஞ்சி சிறு துண்டு
  12. பூண்டு 2
  13. சின்ன வெங்காயம் 4
  14. பட்டை சிறு துண்டு
  15. மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
  16. தண்ணீர் சிறிது
  17. பின் வருபவற்றை குழைக்கவும்: தேங்காய் தலை பால் 2 ஸ்பூன்
  18. முட்டை 3/4
  19. இடியாப்ப மாவு 1/4 கப்

வழிமுறைகள்

  1. அரைக்க கொடுத்திருப்பதை மை போல அரைக்கவும்.
  2. வெறும் வாணலியில் இடியாப்ப மாவை சிம்மில் 5 நிமிடம் வறுத்துக் கொள்ளவும் (குழைக்க வைத்திருக்கும் மாவை வறுக்க தேவையில்லை).
  3. அடுப்பில் தேங்காய்ப்பாலைக் கொதிக்க வைத்து, அரைத்த கலவை, கறிவேப்பிலை, உப்பு எல்லாம் சேர்த்து, 2 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  4. பின், வறுத்த மாவைச் சிறிது சிறிதாக சேர்த்துக் கிளறி இறக்கவும். சேர்த்த கறிவேப்பிலையை நீக்கி விட்டு, கலவையை நன்றாக கரண்டியால் பிசைந்து விட்டு சற்று ஆற விடவும்.
  5. குழைக்கக் கொடுத்திருப்பவற்றை நன்றாக குழைத்து, மாவு கலவையுடன் சேர்த்து நன்றாகப் பிசையவும்.
  6. கையில் எண்ணெய் தடவி, மாவை இளஞ்சூட்டுடன் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, உள்ளங்கையால் அழுத்த வேண்டும். வடிவங்கள் பட்டன் மாதிரி இருக்கும். குழல் வடிவிலும் செய்யலாம். குழல் வடிவத்தை கேரட் துருவியில் தேய்த்து டிசைனும் உருவாக்கலாம்.
  7. கடாயில் எண்ணெயைக் காய வைத்து, நீக்கி வைத்த கறிவேப்பிலையைப் போட்டு பொரித்து எடுக்கவும்.
  8. பின்னர் தட்டி வைத்த உருண்டைகளையும் மிதமான தீயில் அடுக்கு அடுக்காகப் பொரித்து எடுக்கவும். ஒரு அடுக்க வேக 10 நிமிடங்களாவது ஆகும்.
  9. பொரித்ததை ஆறியதும் டப்பாவில் போட்டு சில வாரங்கள் வரை சாப்பிடலாம். சூப்பரான மொறு மொறு சுக்கப்பம் தயார்.
  10. இது கன்னியாகுமரி, கேரளா மக்களின் பாரம்பரிய மாலை நேரப் பண்டம். இதை சிக்கன் ப்ரை/ பீப் ப்ரை மற்றும் இஞ்சி டீ யுடன் சேர்த்து அருந்துவார்கள். இசுலாமிய திருமண வைபவங்களில் மற்றும் பக்ரீத் பெருநாள் சமயங்களில் கண்டிப்பாக இடம் பெறும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்