Photo of Sugiyan by Natchiyar Sivasailam at BetterButter
74
8
0.0(3)
0

Sugiyan

Oct-24-2017
Natchiyar Sivasailam
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மேல் மாவு தயாரிக்க
  2. பச்சரிசி 100கி
  3. உளுந்தம்பருப்பு 50கி
  4. உப்பு 1 சிட்டிகை
  5. பூரணம் தயாரிக்க
  6. கடலைப்பருப்பு 200கி
  7. வெல்லம் 300கி
  8. தேங்காய் துருவல் அரை மூடி
  9. ஏலக்காய் 3
  10. சமையல் எண்ணெய் பொரிப்பதற்குத் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பச்சரிசி, உளுத்தம்பருப்பு இரண்டையும் கலந்து நன்றாகக்கழுவி ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.
  2. பூரணத்திற்கு கடலைப்பருப்பைக் கழுவி குக்கரில் நான்கு விசில் வரும் வரை வேக வைக்கவும்.
  3. வேக வைத்த கடலைப்பருப்பை தண்ணீரை வடித்து நன்கு ஆற விடவும்.
  4. ஆறியதும் கடலைப்பருப்பை மிக்சியில் அரைக்கவும். வைப்பர் மோடில் சிறிது அரைத்துப் பின் வெல்லம் சேர்த்து அரைக்கவும்.
  5. அரைக்கும் பொழுது ஏலக்காய் தோல் நீக்கி சேர்த்து அரைக்கவும்.
  6. அடுப்பில் வாணலியை வைத்து தேங்காய்த் துருவலை இளம் வறுப்பாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  7. பின்னர் அதே வாணலியில் அரைத்த கடலைப்பருப்பு, வெல்லம் கலவையை சேர்த்து நன்கு கிளறவும்.
  8. 2 நிமிடம் கிளறிய பின்னர் வறுத்த தேங்காய்த் துருவலை சேர்த்துக் கிளறவும்.
  9. ஓரளவு கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைக்கவும்.
  10. ஆறியதும் இன்னும் கெட்டியாகும்.
  11. பூரணம் ஆறுவதற்குள் ஊறிய பச்சரிசி, உளுத்தம்பருப்பை மிச்சியில் நைசாக அரைக்கவும்.
  12. அரைத்த மாவில் சிட்டிகை அளவு உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும்.
  13. மாவு பஜ்ஜி மாவு பதத்தில் இருக்க வேண்டும்.
  14. ஆறிய பூரணத்தை சம அளவில் உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
  15. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூரண உருண்டையை பச்சரிசி, உளுத்தம்பருப்பு மாவுக் கலவையில் தோய்த்துப் பொரித்தெடுக்கவும்.
  16. சூடான சுவையான சுசியம் பரிமாறத் தயார்.

மதிப்பீடு (3)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mani Iyer
Oct-25-2017
Mani Iyer   Oct-25-2017

Very much traditional snack. Nicely elaborated & very tasty

Amutha Kannan
Oct-25-2017
Amutha Kannan   Oct-25-2017

கண்டிப்பா பண்ணுவேன் மா...

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்