வீடு / சமையல் குறிப்பு / உளுந்தங்களி

Photo of Urad dal kali by Banupriya Jawahar at BetterButter
171
5
0.0(0)
0

உளுந்தங்களி

Oct-24-2017
Banupriya Jawahar
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

உளுந்தங்களி செய்முறை பற்றி

சத்தான, உடலுக்கு வலிமையும், ஊட்டமும் கொடுக்கும் நம் பாரம்பரிய உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. உளுந்து 1 கப்
  2. வெந்தயம் 2 தே.கரண்டி
  3. நல்லெண்ணெய் 150 மி.லி.
  4. கருப்பட்டி (பொடித்தது) 1கப்
  5. சுக்கு 1 சிட்டிகை
  6. ஏலப்பொடி 1 சிட்டிகை
  7. தண்ணீர் 250 மி.லி

வழிமுறைகள்

  1. உளுந்து 1மணி நேரம் ஊற வைக்கவும்
  2. வெந்தயம் 1 மணிநேரம் ஊற வைக்கவும்.
  3. ஊறிய உளுந்தம்பருப்பை கழுவி சுத்தம் செய்யவும்.
  4. உளுந்து மற்றும் வெந்தயத்தை சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் வழுவழுப்பாக அரைக்கவும்
  5. ஒரு வாய் அகன்ற கனத்த பாத்திரத்தில் 150 மிலி நல்லெண்ணெய் விடவும்
  6. நல்லெண்ணெயில் அரைத்த விழுதைக் கலக்கவும்.
  7. தண்ணீர் விட்டு கட்டி தட்டாமல் கரைக்கவும்
  8. அடுப்பை பற்ற வைத்து பாத்திரத்தை அடுப்பில் ஏற்றவும்
  9. அடி பிடிக்காமலும் கட்டி தட்டாமலும் கிண்டவும்
  10. சுக்கு பொடி சேர்க்கவும்
  11. அடி பிடிக்காமல், பச்சை வாசனை போகும் வரை கிண்டவும்
  12. பச்சை வாசனை போன பின் தூளாக்கிய கருப்பட்டியை சேர்க்கவும்
  13. கருப்பட்டியும், உளுந்த மாவு கரைசலும் சேருமாறு கிண்டவும்
  14. கருப்பட்டியும் உளுந்தமாவும் ஒன்று சேர்ந்து (கரண்டியில் எடுத்து போடும் போது தொப் தொப் என்று விழ வேண்டும்) சரியான பதம் வந்ததும் ஏலக்காய் பொடி தூவி இறக்கவும்.
  15. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்