வீடு / சமையல் குறிப்பு / கேழ்வரகு கூழ்

Photo of Ragi Porridge by Jayasakthi Ekambaram at BetterButter
1020
6
0.0(0)
0

கேழ்வரகு கூழ்

Oct-24-2017
Jayasakthi Ekambaram
1740 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

கேழ்வரகு கூழ் செய்முறை பற்றி

கேழ்வரகு மாவை கரைத்து புளிக்க வைத்து செய்யும் கஞ்சி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. கேழ்வரகு மாவு 250 கிராம்
  2. பச்சரிசி குருணை 250 கிராம்
  3. தயிர் 200 மிலி
  4. பொடியாக நறுக்கிய வெங்காயம்-2
  5. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. காலை 10 மணிக்கு கேழ்வரகு மாவை தண்ணீர் விட்டு கெட்டியாக கரைக்கவும். மூடி வைத்து புளிக்க வைக்கவும்.
  2. அடுத்த நாள் மதியம் 3 மணிக்கு 1 1/2 லிட்டர் தண்ணீரை ஒரு அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்
  3. தண்ணீர் கொதித்ததும் குருணையை கொட்டி நன்றாக வேக விட வேண்டும்
  4. குருணை வெந்ததும் புளிக்க வைத்த கேழ்வரகு மாவு கரைசலை மெதுவாக ஊற்றி கை விடாமல் கலக்க வேண்டும்.
  5. 15 நிமிடம் விடாமல் கிளறி நன்றாக வேக வைத்து அடுப்பிலிருந்து இறக்க வேண்டும்
  6. சற்று ஆற வைத்து மூடி வைக்க வேண்டும்.
  7. தேவைப்படும்போது ஒரு கரண்டி கூழை ஒரு கிண்ணத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர், உப்பு, தயிர், நறுக்கிய வெங்காயம் சேர்த்து கரைத்து குடிக்க வேண்டும்.
  8. 2 நாட்கள் வைத்து பயன்படுத்தலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்