வீடு / சமையல் குறிப்பு / மலபார் காய்போலா

Photo of Malabar Kaipola by Ayesha Ziana at BetterButter
1263
4
0.0(0)
0

மலபார் காய்போலா

Oct-24-2017
Ayesha Ziana
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மலபார் காய்போலா செய்முறை பற்றி

மலபார் பாரம்பரியத்தைக் கொண்ட எளிமையான மாலை நேரத்துப் பண்டம்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கேரளா
  • சிம்மெரிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. நன்றாகப் பழுத்த நேந்திரன் பழம் 2 முதல் 3
  2. முட்டை 4
  3. சீனி 4 டேபிள் ஸ்பூன்
  4. தட்டிய ஏலக்காய் 4
  5. நெய் 2 டேபிள் ஸ்பூன்
  6. முந்திரி கிஸ்மிஸ் தலா 10 முதல் 15

வழிமுறைகள்

  1. ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தில் சிறிது நெய் ஊற்றி முந்திரி கிஸ்மிஸை வறுத்து எடுத்து கொள்ளவும்.
  2. அதே பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய நேந்திரன் வாழைப்பழத்தை சேர்த்து நன்றாக வதக்கவும். சிறிது ப்ரவுன் கலர் ஆனாலும் நல்லது. பின், அடுப்பை அணைத்து பாத்திரத்தை ஆற விடவும்.
  3. ஒரு பவுலில் முட்டைகள், சீனி, ஏலக்காய் சேர்த்து நன்றாக அடிக்கவும். இதை வாழைப்பழத்தின் மீது அப்படியே ஊற்றி நன்றாக கலக்கவும்.
  4. அதன் மேலே வறுத்து வைத்த முந்திரி கிஸ்மிஸை தூவவும்.
  5. பின்னர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிம்மில் 15 முதல் 20 நிமிடங்கள் வேக வைக்கவும்.
  6. வெந்ததும் கவனமாக ஒரு பிளேட்டில் தட்டி துண்டுகள் போடவும். சுவையான மலபார் காய்போலா தயார். இது மலபார் பகுதியின் பாரம்பரிய மாலை நேரத்துச் சிற்றுண்டி ஆகும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்