வீடு / சமையல் குறிப்பு / நேந்திரன் காய்(ஏத்தங்காய்) சிப்ஸ்

Photo of Nendran Kaai(Yethanka) Chips by Ayesha Ziana at BetterButter
61
5
0.0(0)
0

நேந்திரன் காய்(ஏத்தங்காய்) சிப்ஸ்

Oct-24-2017
Ayesha Ziana
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
12 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

நேந்திரன் காய்(ஏத்தங்காய்) சிப்ஸ் செய்முறை பற்றி

நேந்திரன் வாழைக்காய் வைத்து செய்யப்படும் பிரபலமான சிப்ஸ். இது கேரளா மற்றும் கன்னியாகுமரியின் ஸ்பெஷல்.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • கேரளா
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. நேந்திரன் காய் 1 பெரியது
  2. மஞ்சள் தூள் 1/3 ஸ்பூன்
  3. உப்பு 1/3 ஸ்பூன் மற்றும் தூவுவதற்கு
  4. மிளகு தூள் தூவுவதற்கு
  5. தண்ணீர் 1/4 கப் கு குறைவாக
  6. தேங்காய் எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. நேந்திரன் காயைக் கவனமாக உரித்து மெல்லிய சிறு வட்ட துண்டுகளாக கத்தியாலோ ஸ்லைசராலோ வெட்டவும்.
  2. ஒரு பவுலில் மஞ்சள் தூள், 1/3 ஸ்பூன் உப்பு, தண்ணீர், சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நேந்திரன் காய் துண்டுகளை போட்டு மிதமான தீயில் பொரிக்கவும்.
  4. ஒரு நிமிடத்தில் கரைத்து வைத்த மஞ்சள் கலவையில் பாதியை எண்ணையில் ஊற்றவும். கலவை நேந்திரன் காயில் நன்றாக பிடித்து கலர் கொடுக்கும்.
  5. காய் மொறு மொறு பதம் வந்ததும் எடுத்து டிஷ்ஷூ பேப்பரில் வைத்து எண்ணெய் வடிந்ததும் ஒரு பவுலில் வைக்கவும்.
  6. சிப்ஸ் சூடாக இருக்கும் போதே மிளகு தூள், உப்பு தூவி நன்றாக கலக்கவும்.
  7. இதே மாதிரி அடுத்த அடுக்கையும் மீதியுள்ள மஞ்சள் தண்ணீர் ஊற்றி பொரித்து எடுக்கவும்.
  8. மிகவும் சுவையான மொறு மொறு நேந்திரன் காய்(ஏத்தங்காய்) சிப்ஸ் தயார்.
  9. நேந்திரன் காய் கேரளா மற்றும் கன்னியாகுமரியில் இருந்து தான் மற்ற ஊர்கள்/நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த சிப்ஸ் செய்வதெற்கென்றே ஏத்தங்காயை வெளிநாடுகளில் உள்ளவர்கள் அதிகமாக வாங்குகிறார்கள். சிப்ஸும் அதிக அளவில் ஏற்றுமதியாகிறது. நாம் அதை வீட்டிலேயே எளிமையாக செய்து விடலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்