வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் வடை

Photo of Beetroot vada by Thiyonila Xavier at BetterButter
513
4
0.0(0)
0

பீட்ரூட் வடை

Oct-24-2017
Thiyonila Xavier
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் வடை செய்முறை பற்றி

பீட்ரூட் பல வித சத்துக்களை உள்ளடக்கியது.அதை சில குழந்தைகள் சாப்பிட அடம் பிடிப்பார்கள். அவர்களுக்கு இப்படி வடையாக செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பீட்ரூட்: 1/3 கோப்பை துருவியது (கப்)
  2. கடலைபருப்பு:1/3 கோப்பை (கப்)
  3. துவரம் பருப்பு: 1/3 கோப்பை (கப்)
  4. வெங்காயம்:1 பொடியாக நறுக்கியது
  5. இஞ்சி- சிறிய துண்டு
  6. பச்சை மிளகாய்: 3
  7. வர மிளகாய்:1
  8. சோம்பு-1தேக்கரண்டி
  9. கறிவேப்பிலை: 1கொத்து பொடியாக நறுக்கியது
  10. கொத்தமல்லி:சிறிதளவு பொடியாக நறுக்கியது
  11. எண்ணெய்: பொரிக்க தேவையான அளவு
  12. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பருப்பு இரண்டையும் கழுவி 1 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. ஊறிய பிறகு தண்ணீரை நன்கு வடிகட்டி 1தேக்கரண்டி பருப்பை தனியாக எடுத்துவிட்டு மற்ற பருப்பை மின் அம்மியில் (மிக்ஸி) சேர்க்கவும்.
  3. பிறகு அதனுடன் இஞ்சி, ப.மிளகாய், வர மிளகாய், உப்பு , சோம்பு சேர்த்து கொரகொரப்பாக தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.
  4. அரைத்த பருப்பை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி அதனுடன் வெங்காயம் ,கறிவேப்பிலை, கொத்தமல்லி,சோம்பு-1/2தேக்கரண்டி, தனியே எடுத்து வைத்த பருப்பு சேர்க்கவும்.இதனுடன் துருவிய பீட்ரூடில் உள்ள தண்ணீரை நன்கு பிழிந்து சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
  5. மாவை கலந்த உடன் அதை வடை வடிவத்தில் தட்டி அல்லது கோலா உருண்டை வடிவில் செய்து கொள்ள வேண்டும். சிறிது நேரம் ஆனால் பீட்ரூட் மீண்டும் தண்ணீர் விட்டுவிடும்.. அப்படிபட்ட நேரத்தில் சிறிது கடலைமாவு அல்லது அரிசி மாவு சேர்த்து கொள்ள வேண்டும்
  6. கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த்தும் தட்டி வைத்துள்ள வடைகளை சேர்த்து இருபுறமும் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.
  7. சுவையான பீட்ரூட் வடை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்