வீடு / சமையல் குறிப்பு / அம்மிணி கொழுக்கட்டை

Photo of Ammini Kozhukattai by Ramya Sambandam at BetterButter
104
6
0.0(0)
0

அம்மிணி கொழுக்கட்டை

Oct-25-2017
Ramya Sambandam
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அம்மிணி கொழுக்கட்டை செய்முறை பற்றி

அரிசி மாவை வைத்து செய்யும் பலகாரம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி மாவு 1 கப்
  2. தண்ணீர் 2 கப்
  3. உப்பு தேவையான அளவு
  4. எண்ணெய் 2 தேக்கரண்டி
  5. மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
  6. மிளகாய் தூள் தேவையான அளவு
  7. பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
  8. கரம் மசாலா தூள் 1 டேபிள் ஸ்பூன்
  9. கடுகு
  10. கருவேப்பிலை
  11. கடலை பருப்பு
  12. உளுத்தம்பருப்பு
  13. தேங்காய் துருவல்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் சிறிது எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்
  2. நன்கு சுட்டவுடன் அடுப்பில் இருந்து இறக்கி கை பொறுக்கும் சூடு வரும் வரை காத்திருக்கவும்
  3. மற்றொரு பாத்திரத்தில் அரிசிமாவு, மிளகாய் தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து கலக்கவும்.
  4. அத்துடன் வெண்ணீரை விட்டு நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.
  5. சிறிது நேரம் அதை மூடி ஊற வைக்கவும்.
  6. பதினைந்து நிமிடம் அல்லது அரை மணி நேரம் கழித்து, கைகளில் எண்ணெய் தடவி அதை சின்ன உருண்டைகளாக உருட்டி விடவும்
  7. உருட்டிய அதை இட்லி குக்கரில் வைத்து 10 நிமிடம் வேக வைக்கவும்
  8. ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு, வரமிளகாய் (தேவை பட்டால்) கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  9. அத்துடன் தேங்காய் துருவல் சேர்த்து கலக்கவும். பின்னர் வேக வைத்த உருண்டைகளை அதில் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  10. உங்கள் சுவையான மசாலா அல்லது கார அம்மிணி கொழுக்கட்டை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்