வீடு / சமையல் குறிப்பு / மூங்கில் அரிசி பாயாசம்

Photo of Bamboo rice payasam by saranya sathish at BetterButter
1025
5
0.0(0)
0

மூங்கில் அரிசி பாயாசம்

Oct-25-2017
saranya sathish
90 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
50 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மூங்கில் அரிசி பாயாசம் செய்முறை பற்றி

மூங்கில் அரிசி மிகவும் சத்துள்ள நம் பாரம்பரிய அரிசி. இந்த அரிசியை வாரம் ஒருமுறை பயன்படுத்தி வந்தால் உடல் பலம் அதிகரிக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மூங்கில் அரிசி: 1/4 கப்
  2. நெய் - தேவையான அளவு
  3. தேங்காய் பால்: 1 கப்
  4. பாசிப்பருப்பு: 2 டேபிள் ஸ்பூன்
  5. ஏலக்காய், முந்திரி, திராட்சை: தேவையான அளவு
  6. வெல்லம்: 1/2 கப்

வழிமுறைகள்

  1. மூங்கில் அரிசி மற்றும் பாசிப்பருப்பை நன்கு கழுவ வேண்டும். சுமார் 3 மணி நேரத்திற்கு அரிசி மற்றும் பருப்பு ஊறவிடவும்.
  2. பின்னர் இவை அனைத்தையும் ஒரு குக்கரில் தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக வைக்கவும். 6 விசில் வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கவும்.
  3. இதற்கிடையில் அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணிர் வெல்லம சேர்க்கவும். வெல்லம் முழுவதும் கரைந்ததும் அதை வடிகட்டவும்.
  4. வெல்லம் பாகை அரிசியுடன் சேர்த்து நன்கு கலந்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைக்கவும். தேங்காய் பால் சேர்த்து 2 நிமிடங்கள் சமைக்கவும்.
  5. நெய்யில் முந்திரி மற்றும் திராட்சை பொன்னிறம் ஆகும் வரை வறுத்து பாயாசத்தில் சேர்க்கவும். கொஞ்சம் ஏலக்காய் பொடி சேர்த்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்