Photo of Palapazha Payasam by Priya Tharshini at BetterButter
1034
6
0.0(1)
0

Palapazha Payasam

Oct-25-2017
Priya Tharshini
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • பண்டிகை காலம்
  • கேரளா

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பலாபழம் - 10 சுளைகள்
  2. வெல்லம் - 1/3 கப்
  3. தேங்காய் பால் - 1 கப்
  4. முந்திரி - 1 தேக்கரண்டி ( நறுக்கியது)
  5. திராட்சை - 1 தேக்கரண்டி
  6. தேங்காய் - 1 தேக்கரண்டி ( நறுக்கியது)
  7. நெய் - 4 தேக்கரண்டி
  8. ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
  9. தண்ணீர் - தேவைக்கேற்ப்ப

வழிமுறைகள்

  1. நன்கு பழுத்த பலா சுளைகளாக எடுத்து கொட்டைகளை நீக்கி பொடியாக நறுக்கவும்.
  2. அதை 4 தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து பிரஷர் குக்கரில் 4 விசில் விடவும்.
  3. அது ஆறியவுடன் மிக்ஸியில் சேர்த்து விழுது போல் அரைக்கவும்.
  4. வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வைத்து கொள்ளவும்.
  5. கடாயில் 2 தேக்கரண்டி நெய் சேர்த்து முந்திரி,திராட்சை,தேங்காய் பல் ஆகியவற்றை பொன் நிறமாக வறுத்து எடுக்கவும்.
  6. அதே கடாயில் மீதம் நெய் சேர்த்து சூடானதும் அரைத்த பலாபழ விழுதை சேர்த்து கலககவும்.
  7. வெல்லம் தண்ணீரை வடிகட்டி பலாபழத்துடன் சேர்க்கவும். ஏலக்காய் தூள் சேர்க்கவும். அது இறுகும் வரை கிளறவும்.
  8. பின்பு தேங்காய் பால் சேர்த்து கலக்கவும். ஒரு கொதி வந்ததும் அடுப்பை அனைக்கவும்.
  9. வறுத்த முந்திரி,திராட்சை,தேங்காய் பல் சேர்த்து பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mani Iyer
Oct-25-2017
Mani Iyer   Oct-25-2017

Real traditional Kerala recipe. Nicely explained the recipe & process. Verrrrrry tasty

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்