Photo of Dried fish by Banupriya Jawahar at BetterButter
690
4
0.0(0)
0

கருவாடு

Oct-25-2017
Banupriya Jawahar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கருவாடு செய்முறை பற்றி

கருவாடு தமிழ் நாட்டின் ஆரோக்கியமான பாரம்பரிய உணவு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. துண்டு மீன் கருவாடு 2 துண்டு
  2. நல்லெண்ணெய் 100 மி.லி
  3. சின்ன வெங்காயம் 500 கி
  4. பச்சை மிளகாய் 4
  5. கருவேப்பிலை 1 இனுக்கு

வழிமுறைகள்

  1. 10 நிமிடம் வெந்நீரில் கருவாடை ஊற வைக்கவும்.
  2. வாணலியில் நல்லெண்ணெயை சூடாக்கி நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
  3. வெந்நீரில் ஊறிய கருவாடு சற்று மென்மையாகி இருக்கும். அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
  4. வெட்டிய கருவாட்டு துண்டுகளை, வதங்கிக் கொண்டிருக்கும் வெங்காயத்தோடு சேர்த்து வதக்கவும்.
  5. கருவாடு வேகும் வரை வாணலியை மூடி வைக்கவும்.
  6. இடையிடையே வாணலியை திறந்து வதக்கவும்.
  7. கருவாடு நன்கு வெந்து, வெங்காயமும் வதங்கி எண்ணெய் மேலே வர ஆரம்பிக்கும் போது அடுப்பை அணைத்து விடவும்.
  8. பழைய சாதம், பருப்பு சாதம், சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்