வீடு / சமையல் குறிப்பு / தட்ட பயிர் உருண்டை

Photo of Thatta payir urundai by Swathy Nandhini at BetterButter
1427
7
0.0(0)
0

தட்ட பயிர் உருண்டை

Oct-25-2017
Swathy Nandhini
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

தட்ட பயிர் உருண்டை செய்முறை பற்றி

தட்ட பயிர் உருண்டை சத்தான மறைந்த பாரம்பரிய பண்டிகை பலகாரம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. தட்ட பயிர் (காராமணி)- 1 கப்
  2. வெல்லம் - 1 கப்
  3. தண்ணீர் - 2 கப் 
  4. ஏலக்காய் - 2
  5. சுக்கு - 1/2 அங்குலம்
  6. எண்ணெய் – தேவைக்கேற்ப 

வழிமுறைகள்

  1. தட்ட பயிரை கழுவி, ஒரு மணி நேரத்திற்கு 2 கப் தண்ணீரில் ஊறவைக்கவும்.
  2. இதற்கிடையில், வெல்லம் மற்றும் தண்ணீரை ஒன்றாக கொதிக்க வைக்கவும். 
  3. வெல்லம் கரைந்ததும் வடிகட்டி மீண்டும் உருட்டு பதம் வரும் வரை கொதிக்க விடவும். (தக்காளி பாகு)
  4. அடுப்பில் இருந்து இறக்கி, சுக்கு மற்றும் ஏலக்காயை இடித்து சேர்த்து கொள்ளவும். 
  5. இப்போது ஊறிய தட்ட பயிரை, தண்ணீர் வடித்து மிக்ஸியில் சேர்த்து மென்மையாக அரைத்து கொள்ளவும்.
  6. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்த தட்ட பயிர் கலவையை சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போடவும். 
  7. மிதமான தீயில் உருண்டைகளை பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். 
  8. பொரித்த உருண்டைகளை வெல்லபாகில் போட்டு ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
  9. ஆரோக்கியமான தட்ட பயிர் உருண்டை தயார். 

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்