வீடு / சமையல் குறிப்பு / ஊர்மா( மேலப்பாளையம் ஸ்பெஷல்)

Photo of OORMA by Munsila Fathima at BetterButter
611
4
0.0(0)
0

ஊர்மா( மேலப்பாளையம் ஸ்பெஷல்)

Oct-25-2017
Munsila Fathima
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஊர்மா( மேலப்பாளையம் ஸ்பெஷல்) செய்முறை பற்றி

இனிப்பு வகையை சார்ந்தது

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சீரக சம்பா அரிசி - 50gm
  2. சர்க்கரை- 70gm( தேவை என்றால் சற்று கூட்டியோ ,குறைத்தோ கொள்ளுங்கள்)
  3. உப்பு- ஒரு சிட்டிகை
  4. தேங்காய்- 4 துண்டு
  5. நெய்- தேவைக்கேற்ப
  6. முந்திரி-8- 10
  7. ஏலக்காய் தூள்- தேவைக்கேற்ப
  8. முட்டை- 2

வழிமுறைகள்

  1. 10 நிமிடம் அரிசியை ஊற வையுங்கள்.
  2. தேங்காய் பால் தண்ணீர் சேர்த்து சற்று நீராகவே எடுத்து கொள்ளுங்கள்.
  3. அரிசியை சற்று தேங்காய் பால் சேர்த்து மையாக அரைக்க வேண்டும்
  4. அரைத்த அரிசியை தேங்காய் பாலுடன் நன்கு கலக்கி கொள்ளுங்கள்.
  5. வாணலியில் 2 மேஜைக்கரண்டி நெய் ஊற்றி ஏலக்காய் தூள், முந்திரி சேர்த்து சற்று சிவக்க விடுங்கள்.
  6. அதில் நன்கு கலக்கிய அரிசி தேங்காய் பாலை அதில் ஊற்றவும். ஊற்றியவுடன் சிம்மில் வைத்து கிளறி கொண்டே இருங்கள். இல்லையென்றால் அரிசி கட்டி கட்டியாக திரண்டு விடும்.
  7. அரிசி வேகும் வரை கிளருங்கள். வெந்து வரும் போது சர்க்கரையை அதனுடன் சேர்க்கவும்.
  8. சர்க்கரை கரைந்த பின் முட்டையை கொஞ்சம் சர்க்கரை சேர்த்து நன்கு அடித்து அதில் சேர்த்து 10 நிமிடம் வேக வைக்கவும்.
  9. ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கொள்ளுங்கள். தேவையென்றால் நெய் மேல ஊற்றி கொள்ளுங்கள்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்