Photo of CURRY LEAVES GARLIC GRAVY by Priya Mani at BetterButter
786
9
0.0(1)
0

CURRY LEAVES GARLIC GRAVY

Oct-25-2017
Priya Mani
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • பாய்ளிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. கருவேப்பிலை 1 கப்
  2. பூண்டு 12 பெரிய பல்
  3. தக்காளி 1 பெரியது
  4. புளி கரைசல் 1கப் ஒரு எலுமிச்சை பழம் அளவு
  5. வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
  6. மஞ்சள் தூள் 1/4 டீஸ்புன்
  7. மல்லி தூள் 2 டீஸ்பூன்
  8. மிளகாய் பொடி 21/2 டீஸ்பூன்
  9. இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
  10. துருவிய வெல்லம் 3/4 டீஸ்பூன்
  11. நல்லெண்ணெய் 3 குழி கரண்டி
  12. உப்பு தேவையான அளவு
  13. தாளிக்க கடுகு 1 டீஸ்பூன்
  14. வெந்தயம் 1/2 டீஸ்பூன்
  15. உளுத்தம் பருப்பு 1/2 டீஸ்பூன்
  16. காய்ந்த மிளகாய் 2
  17. கருவேப்பிலை 2 கொத்து
  18. பெருங்காயம் 3/4 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு கடாயில் 1 டீஸ்புன் எண்ணெய் ஊற்றி கருவேப்பிலை நன்கு மொறு மொறுவென்று வதக்கவும்
  2. வறுத்த கருவேப்பிலயை தக்காளியுடன் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும்
  3. புளி யை தண்ணிரில் ஊறவைத்து கரைத்து வடிகட்டி கொள்ளவும்
  4. ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு வெந்தயம் உளுத்தம் பருப்பு கருவேப்பிலை காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்
  5. அதனுடன் பெருங்காயம் சேர்த்து கொள்ளவும்
  6. இதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்
  7. அடுத்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்
  8. இதில் நறுக்கிய பூண்டு சேர்த்து சற்று பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கவும்
  9. இதில் அரைத்த தக்காளி கருவேப்பிலை மற்றும் புளி கரைசல் கலவையை சேர்க்கவும்
  10. மீதம் உள்ள மஞ்சள் தூள் மற்றும் மல்லி தூள் மிளகாய் தூள் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்
  11. இது ஒரு 20 நிமிடம் கொதிக்க வைக்கவும்
  12. ஊற்றிய எண்ணெய் மேலே மிதக்கும் வரை சுண்ட விட வேண்டும்
  13. அதற்கு சுமார் 15 முதல் 20 நிமிடம் வரை ஆகும்
  14. இப்போழுது சூடான சுவையான கருவேப்பிலை பூண்டு குழம்பு தயார்
  15. சுட சுட சாதத்தில் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்
  16. ஒருவாரம் வரை வைத்து சாப்பிடலாம் . இதில் இரும்பு சத்து அதிகம் உள்ளது

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mani Iyer
Oct-25-2017
Mani Iyer   Oct-25-2017

Traditional garlic kuzhambu with added with Corinder leaves. Nice innovated recipe. Process properly explained. Very tasty

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்