வீடு / சமையல் குறிப்பு / அரேபியன் ஸ்வீட் டாமரின்ட்

Photo of Arabian Sweet Tamarind by Ayesha Ziana at BetterButter
754
3
0.0(0)
0

அரேபியன் ஸ்வீட் டாமரின்ட்

Oct-25-2017
Ayesha Ziana
600 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

அரேபியன் ஸ்வீட் டாமரின்ட் செய்முறை பற்றி

அரேபியாவின் இனிப்பும் புளிப்பும் கலந்த பாரம்பரியமான குளிர்பானம்.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • மிடில் ஈஸ்டர்ன்
  • பாய்ளிங்
  • சில்லிங்
  • கோல்ட் டிரிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. புளி 1 கப்
  2. சீனி 1 3/4 கப் அல்லது தேவைக்கு
  3. தண்ணீர் 2 லிட்டர்
  4. ரோஸ் வாட்டர்(பன்னீர்) 30 மில்லி

வழிமுறைகள்

  1. ஒரு அகண்ட பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, புளியையும் சீனியையும் சேர்த்து நன்றாக வேக விடவும்.
  2. புளி நன்றாக மசிந்ததும் அடுப்பை அணைத்து மூடி வைக்கவும். குறைந்தது 2 மணி நேரம் முதல் அதிகபட்சம் ஒரு இரவு வரை ஊற வேண்டும்.
  3. பின்னர் கையால் மசித்து வடிகட்டவும். பரிமாறும் வரை வடிகட்டியதை பிரிட்ஜில் வைக்கவும்.
  4. பரிமாறும் போது ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலந்து ஐஸ் கியூப்ஸ் சேர்த்து பரிமாறவும்.
  5. அருமையான அரேபியன் ஸ்வீட் டாமரின்ட் தயார்.
  6. இது அரேபியாவில் நோன்பு காலங்களிலும் மற்ற நேரங்களிலும் பரிமாறப்படும் ஒரு பாரம்பரியமான குளிர்பானம் ஆகும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்