Photo of Aatukaal paya/ Goat leg soup by Asiya Omar at BetterButter
1994
7
0.0(2)
0

Aatukaal paya/ Goat leg soup

Oct-25-2017
Asiya Omar
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. ஆட்டுக்கால் - 2 செட்(8 எண்ணம்)
  2. பெரிய வெங்காயம் - 2
  3. பெரிய தக்காளி -1
  4. பச்சை மிளகாய் -2
  5. மல்லி,புதினா,கறிவேப்பிலை - சிறிது
  6. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன்
  7. கரம் மசாலா(ஏலம்,பட்டை,கிராம்புத்தூள்)- அரைடீஸ்பூன்
  8. மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்
  9. மிளகாய்த்தூள் - அரைடீஸ்பூன்
  10. நல்ல எண்ணெய் -2 டேபிள்ஸ்பூன்
  11. உப்பு - தேவைக்கு.
  12. அரைக்க:-
  13. மிளகு - 1 டேபிள்ஸ்பூன்
  14. சீரகம்- 1டேபிள்ஸ்பூன்
  15. சோம்பு - 1 டீஸ்பூன்
  16. மல்லித்தூள்- 1 டேபிள்ஸ்பூன்
  17. தேங்காய்த்துருவல் - 4 டேபிள்ஸ்பூன்
  18. முந்திரி பருப்பு -8
  19. காரம் தேவைப்பட்டால் மிளகைக் கூட்டிக் கொள்ளலாம்.இதுவே சரியாக இருக்கும்.

வழிமுறைகள்

  1. ஆட்டுக்கால் சுத்தம் செய்தே கிடைக்கிறது.அதனை துண்டு போட்டு வாங்கிக் கொள்ளவும்.தேவைக்கு தண்ணீர் சேர்த்து குக்கரில இரண்டு விசில் வரவும் அடுப்பைக் குறைத்து அரைமணி நேரம் வேக வைத்துக் கொள்ளலாம்.
  2. அரைக்க சொன்னவற்றை அரைத்து தயார் செய்து வைக்கவும்.
  3. பாயா வைக்க ஒரு பெரிய பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெங்காயம் நன்கு வதக்கவும்.இஞ்சி பூண்டு பேஸ்ட்,கரம் மசாலா சேர்த்து சிம்மில் வைத்து வதக்கவும்.மல்லி,புதினா,கறிவேப்பிலை சேர்க்கவும்.தக்காளி யை மிக்ஸி ஜாரில் அரைத்து சேர்க்கவும்.
  4. மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள் சேர்க்கவும் எல்லாம் சேர்ந்து வதங்கி கூட்டு போல் ஆக வேண்டும்.
  5. பின்பு குக்கரில் வேக வைத்த ஆட்டுக் கால் சூப்புடன் சேர்க்கவும்.
  6. தேவைக்கு உப்பு சேர்த்து அரைத்த மசால் சேர்க்கவும்.கெட்டி தன்மைக்கு ஏற்ப தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  7. நல்ல கொதித்து தேங்காய் வாடை மடங்க வேண்டும்.
  8. சுவையான சத்தான ஆட்டுக்கால் பாயா தயார்.அடுப்பை அணைக்கவும்.
  9. தோசை ,இடியாப்பம,ஆப்பம், பரோட்டா..ஏன் சாதத்துடனும் பரிமாறலாம்.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Sukhmani Bedi
Dec-08-2017
Sukhmani Bedi   Dec-08-2017

Nice one

Pushpa Taroor
Oct-25-2017
Pushpa Taroor   Oct-25-2017

Like it

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்