வீடு / சமையல் குறிப்பு / கதம்ப கறிகா(ய்)

Photo of Mixed veggie curry by Banupriya Jawahar at BetterButter
447
3
0.0(0)
0

கதம்ப கறிகா(ய்)

Oct-25-2017
Banupriya Jawahar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கதம்ப கறிகா(ய்) செய்முறை பற்றி

சத்தான சுவையான நாட்டு காய்கறிகளின் கலவை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நாட்டு கத்திரிக்காய் 4
  2. உருளைக்கிழங்கு 1 (பெரியது)
  3. புளிப்பு மாங்காய் 1 /புளி நெல்லிக்காய் அளவு
  4. வெண்டைக்காய் 4
  5. பொடி பாகற்காய் 4
  6. வாழைக்காய் 1
  7. கோவைக்காய் 4
  8. சின்ன வெங்காயம் 10
  9. நாட்டு தக்காளி 2
  10. பூண்டு 5 பல்
  11. கறிவேப்பிலை 1 இணுக்கு
  12. சீரகத்தூள் 1/2 தேக்கரண்டி.
  13. மல்லித்தூள் 1 தேக்கரண்டி
  14. மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
  15. பெருங்காயத்தூள் 1 சிட்டிகை
  16. நல்லெண்ணெய் 1 குழிக்கரண்டி அளவு
  17. கடுகு, அ.உ. பருப்பு - தாளிக்க
  18. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. காய்கறிகளை கழுவி பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. வெங்காயம், தக்காளியை பொடியாக அரிந்து கொள்ளவும்.
  3. பூண்டை உரித்துக் கொள்ளவும்.
  4. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும், கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து தாளிக்கவும்.
  5. நறுக்கிய காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.
  6. சீரகத்தூள், மல்லித்தூள், மிளகாய் தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.
  7. தேவைப்பட்டால் இடையிடையே தண்ணீர் தெளித்து வேக விடலாம்.
  8. அல்லது எண்ணெய் சேர்த்து வதக்கலாம்.
  9. மாங்காய்க்கு பதிலாக நெல்லிக்காய் அளவு புளியைக் கரைத்து சேர்த்து வேக விடலாம்.
  10. காய்கறி வெந்ததும் இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்