Photo of Barnyard Millet Idiyappam by Ayesha Ziana at BetterButter
816
4
0.0(1)
0

Barnyard Millet Idiyappam

Oct-25-2017
Ayesha Ziana
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Barnyard Millet Idiyappam செய்முறை பற்றி

பாரம்பரியமான சிறுதானியம் குதிரைவாலியில் இருந்து மாவு தயார் செய்து அதில் இருந்து செய்த இடியாப்பம்.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • ஸ்டீமிங்
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. குதிரைவாலி 3/4 கப்
  2. உப்பு தேவைக்கு
  3. தண்ணீர் 1 1/4 கப்(உத்தேசம்)
  4. எண்ணெய் தேவைக்கு

வழிமுறைகள்

  1. குதிரைவாலி அரிசியைக் கழுவி, சுத்தமான காட்டன் துணியில் பரத்தி, நிழலில் உத்தேசம் 30 நிமிடங்கள் உலர வைக்கவும்.
  2. அரிசியில் சிறிது ஈரப்பதம் இருக்க வேண்டும். நன்றாக உலரக் கூடாது. பின் அதை மிக்ஸியில் நன்றாக பொடித்து வைக்கவும். 3/4 கப் மாவு கிடைக்கும்.
  3. வெறும் வாணலியில் மாவை 6-8 நிமிடங்கள் சிம்மில் வறுக்கவும். அரிசி மாவு தயார். இதை ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து தேவைக்கு பயன்படுத்தவும்.
  4. இடியாப்பம் செய்ய: ஒரு பவுலில் மாவையும் உப்பையும் கலந்து வைக்கவும்.
  5. ஒரு வாணலியில் 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். அடுப்பை அணைக்கக் கூடாது.
  6. பின், கொதிக்கும் நீரைக் கொஞ்சம் கொஞ்சமாக பவுலில் ஊற்றி கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். உத்தேசம் 1 1/4 கப் தண்ணீர் தேவைப்படும். மாவு ஒட்டும் பதம் வந்ததும் தண்ணீரை நிறுத்தி விட வேண்டும்.
  7. இடியாப்ப குழலில் கொஞ்சம் மாவு உருட்டி வைத்து, எண்ணெய் தடவிய இட்லி/இடியாப்ப தட்டில் பிழிந்து 8 முதல் 10 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுக்கவும். சுவையான ஆரோக்கியமான குதிரைவாலி சிறுதானியம் இடியாப்பம் தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Oct-25-2017
Pushpa Taroor   Oct-25-2017

Ok

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்