வீடு / சமையல் குறிப்பு / அசோகா அல்வா

Photo of Asoka Halwa by Ramya Sambandam at BetterButter
1004
7
0.0(0)
0

அசோகா அல்வா

Oct-25-2017
Ramya Sambandam
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

அசோகா அல்வா செய்முறை பற்றி

தென் இந்திய சிறப்பு உணவு. பாசி பருப்பு கொண்டு செய்யும் இனிப்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. பாசி பருப்பு - 1/2 கப்
  2. கோதுமை மாவு 2 tbஸ்பூன்
  3. சர்க்கரை - 1 கப்
  4. நெய் - 1/4 கப்
  5. ஏலக்காய் - ஒரு சிட்டிகை
  6. கலர் (தேவைப்பட்டால்)

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் பாசி பருப்பை நன்கு வறுக்கவும் (எண்ணெய் விடாமல்)
  2. பிறகு அதை ஒரு 10 அல்லது 15 நிமிடம் ஊறவைக்கவும்.
  3. மேலிருக்கும் இரண்டும் நேரம் இருந்தால் செய்யவும். இல்லையென்றால் விட்டுவிடலாம்
  4. பாசி பருப்பை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்
  5. வேக வைத்த பாசி பருப்பை நன்றாக மசிக்கவும்.
  6. வாணலியில் நெய் சேர்த்து முந்திரி காய்ந்த திராட்சை வறுத்துக்கொள்ளவும்
  7. அதே வாணலியில் கோதுமை மாவை வறுத்து எடுத்துக்கொள்ளவும். அதை கருகி விடாமல் வறுத்துக்கொள்ளவும்
  8. இன்னொரு வாணலியில் சிறிது நெய் விட்டு, மசித்த பருப்பையும் சர்க்கரையும் சேர்த்து நன்கு கலக்கவும்
  9. தேவைபப்படும் நேரத்தில் நெய் விட்டு கிளறவும்
  10. ஒரு கட்டத்தில் கலவை இறுக தொடங்கி அதன் நிறம் மாறும்.
  11. சற்று நேரம் கழித்து அதில் கலர் மற்றும் வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து கிளறவும்
  12. கடைசியாக வறுத்த கோதுமை மாவையும் சேர்த்து கட்டி பிடிக்காமல் கிளறவும்.
  13. அது கட்டியாகும் வரை கிளறி கொண்டே இருக்கவும்
  14. சிறிது நேரத்தில் அது அல்வா பதித்திற்கு வரும், பாத்திரத்தில் ஒட்டாமல்.
  15. அடுப்பை அணைத்து விட்டு அதை மற்றொரு பாத்திரத்தில் மாற்றவும்
  16. தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் வறுத்த முந்திரியை மேலே தூவி அலங்கரித்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்