Photo of Nanjil DryGinger Porridge by Ayesha Ziana at BetterButter
929
4
0.0(1)
0

Nanjil DryGinger Porridge

Oct-25-2017
Ayesha Ziana
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Nanjil DryGinger Porridge செய்முறை பற்றி

சுக்கு சேர்த்து அரைத்த தேங்காய் மசாலா வைத்து செய்த நாகர்கோவில் ஸ்பெஷல் சுக்கு கஞ்சி.

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • பிரெஷர் குக்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பச்சரிசி 1/2 கப்
  2. சின்ன வெங்காயம் 5
  3. பூண்டு 4 பல்
  4. வெந்தயம் 1/2 ஸ்பூன்
  5. தண்ணீர் 2 கப்
  6. சுடு தண்ணீர் 2 கப்
  7. உப்பு தேவைக்கு
  8. கறிவேப்பிலை 1 கொத்து
  9. பின் வருபவற்றை அரைக்கவும்: துருவிய தேங்காய் 4 முதல் 5 ஸ்பூன்
  10. சுக்கு ஒரு மீடியம் சைஸ் துண்டு
  11. மல்லித்தூள் 3/4 ஸ்பூன்
  12. சின்ன வெங்காயம் 3
  13. சீரகம் 1/2 ஸ்பூன்
  14. பட்டை ஒரு சின்ன துண்டு

வழிமுறைகள்

  1. குக்கரில் அரிசி, 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து சிம்மில் வைத்து 2 விசில் வேக வைக்கவும்.
  2. பின்னர் மூடியைத் திறந்து சின்ன வெங்காயம், பூண்டு, வெந்தயம் சேர்த்து கிளறவும். சுடு தண்ணீரை இடைவெளி விட்டு விட்டு சேர்க்கவும்.
  3. மிக்ஸியில் அரைக்க கொடுத்திருப்பவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து கொஞ்சம் கரகரப்பாக அரைக்கவும்.
  4. கஞ்சி கொஞ்சம் மசிந்ததும் அரைத்த கலவையை சேர்க்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கவும்.
  5. இறுதியில் மேலும் கொஞ்சம் உப்பு, கறிவேப்பிலை சேர்த்து கஞ்சி பதம் வந்ததும் இறக்கி ஆற வைத்து அருந்தவும்.
  6. க்ரீமியாக இருக்க விரும்புபவர்கள் கொஞ்சம் திக்காக அருந்தலாம்.
  7. இதனுடன் துவையல்/ஊறுகாய் அருமையாக இருக்கும்.
  8. சுவையான செரிமானப் பிரச்சினையைத் தீர்க்கும் பாரம்பரியமான நாஞ்சில் சுக்கு கஞ்சி தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Oct-25-2017
Pushpa Taroor   Oct-25-2017

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்