Photo of Chola Koolu by Tamilarasi Muthukumar at BetterButter
2332
6
0.0(0)
0

சோளக் கூழ்

Oct-25-2017
Tamilarasi Muthukumar
360 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
6 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சோளக் கூழ் செய்முறை பற்றி

முதலில் சுமார் ஒரு ஆறு மணி நேரத்திற்கு ,ஒரு கப் சோளத்தை நன்றாக கழுவிய பின்னர், இரண்டு கப் தண்ணீரில், ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் அந்த தண்ணீரை கீழே ஊற்றாமல், மிக்சியில் இட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு அடி பிடிக்காத பாத்திரத்தில், மூன்று கப்பு தண்ணீர் ஊற்றி, அக்கலவையை அதில் விட்டு , மிதமான தீயில் தேவைக்கேற்றாற் போல உப்பிட்டு அடிபிடிக்கா வண்ணம் கிளற வேண்டும். நன்றாக தண்ணீர் வற்றிய பின்பு தேவைக்கேற்ப மோர் சேர்த்து நன்றாக கரைத்து குடிக்க வேண்டும். மோரில் கொஞ்சம் அரைத்த பச்சை மிளகாய், இஞ்சியையும் சேர்த்து, கொஞ்சம் கறுவேப்பிலை கொத்த மல்லி சேர்த்து இருக்க அதன் ருசியோ சின்ன வெங்காயத்தை தொட்டு சாப்பிட வெயில் காலத்திறகு ஏற்ற உணவு. மாறாக குழந்தைகளுக்கு கருப்பட்டியை பொடி செய்து அதற்கேற்ற நல்லெண்ணையில் குழைத்து கழியாக ஊட்டினால் அளவிள்ளாத சத்து குறைந்த செலவில் கிடைக்கும். ராகி, கேழ்வரகு போன்றவற்றிலும் இந்த கூழை செய்து சாப்பிடுவது பழந்தமிழர்களின் பாரம்பரிய உணவாக இருந்து என்றால் அது மிகையாகாது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சோளம் ஒரு கப்பு
  2. உப்பு அரை ஸ்பூன்
  3. ஒரு கப்பு மோர்
  4. 2 பச்சை மிளகாய்
  5. சிறிய துண்டு இஞ்சி
  6. கறுவேப்பிலை 5
  7. கருப்பட்டி 2 சிறியது
  8. நல்லெண்ணெய் ஒரு தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. முதலில் சுமார் ஒரு ஆறு மணி நேரத்திற்கு ,ஒரு கப் சோளத்தை நன்றாக கழுவிய பின்னர், இரண்டு கப் தண்ணீரில், ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
  2. அதன் பின்னர் அந்த தண்ணீரை கீழே ஊற்றாமல், மிக்சியில் இட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  3. ஒரு அடி பிடிக்காத பாத்திரத்தில், மூன்று கப்பு தண்ணீர் ஊற்றி, அக்கலவையை அதில் விட்டு , மிதமான தீயில் தேவைக்கேற்றாற் போல உப்பிட்டு அடிபிடிக்கா வண்ணம் கிளறி, நன்றாக தண்ணீர் வற்றிய பின்பு தேவைக்கேற்ப மோர் சேர்த்து நன்றாக கரைத்து குடிக்க வேண்டும்.
  4. மோரில் கொஞ்சம் அரைத்த பச்சை மிளகாய், இஞ்சியையும் சேர்த்து, கொஞ்சம் கறுவேப்பிலை கொத்த மல்லி சேர்த்து இருக்க அதன் ருசியோ சின்ன வெங்காயத்தை தொட்டு சாப்பிட வெயில் காலத்திறகு ஏற்ற உணவு.
  5. மாறாக குழந்தைகளுக்கு கருப்பட்டியை பொடி செய்து அதற்கேற்ற நல்லெண்ணையில் குழைத்து கழியாக ஊட்டினால் அளவிள்ளாத சத்து குறைந்த செலவில் கிடைக்கும். ராகி, கேழ்வரகு போன்றவற்றிலும் இந்த கூழை செய்து சாப்பிடுவது பழந்தமிழர்களின் பாரம்பரிய உணவாக இருந்தது என்றால் அது மிகையாகாது.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்