வீடு / சமையல் குறிப்பு / பருப்பு வடை

Photo of Paruppu vadai by Ayesha Ziana at BetterButter
756
4
0.0(0)
0

பருப்பு வடை

Oct-25-2017
Ayesha Ziana
135 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பருப்பு வடை செய்முறை பற்றி

கடலை பருப்பு, மசாலாக்கள் சேர்த்து செய்த தமிழ்நாடு ஸ்பெஷல் பருப்பு வடை.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலை பருப்பு 1 கப்
  2. வெங்காயம் 1 அல்லது தேவைக்கு, பொடியாக நறுக்கியது
  3. பெருஞ்சீரகம் 1/2 கையளவு
  4. வற்றல் மிளகாய் 6 அல்லது தேவைக்கு
  5. இஞ்சி சிறு துண்டு(தேவைப்பட்டால்)
  6. கறிவேப்பிலை நறுக்கியது 1 கொத்து
  7. உப்பு தேவைக்கு
  8. தண்ணீர் அரைக்க
  9. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. கடலை பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. கொஞ்சம் கடலை பருப்பைத் தனியே எடுத்து வைக்கவும். பின்னர் வற்றல் மிளகாய், இஞ்சி சேர்த்து மீதமுள்ள பருப்பை கொரகொரப்பாக அரைக்கவும்.
  3. ஒரு பவுலில் அரைத்த கலவை, வெங்காயம், பெருஞ்சீரகம், கறிவேப்பிலை, உப்பு, எடுத்து வைத்த கடலை பருப்பு அத்தனையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  4. சிறு சிறு வடைகளாக தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான தமிழ்நாடு ஸ்டைல் பருப்பு வடை தயார். இது மாலை நேர டீயுடன் அல்லது சைவ இலை சாப்பாட்டில் பாயாசத்துடன் பரிமாறுவார்கள்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்