Photo of Nanjil Ajwain Potato Masala by Ayesha Ziana at BetterButter
647
7
0.0(1)
0

Nanjil Ajwain Potato Masala

Oct-25-2017
Ayesha Ziana
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Nanjil Ajwain Potato Masala செய்முறை பற்றி

ஓமம் மற்றும் சில பொருட்களை சேர்த்து அரைத்து செய்த நாகர்கோவில் ஸ்பெஷல் உருளைக்கிழங்கு மசாலா.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உருளைக்கிழங்கு 2
  2. வெங்காயம் 1
  3. உப்பு தேவைக்கு
  4. தேங்காய் எண்ணெய் தாளிக்க
  5. கடுகு 1 ஸ்பூன்
  6. கறிவேப்பிலை 1 கொத்து
  7. பின் வருபவற்றை வறுத்து அரைக்கவும்: வற்றல் மிளகாய் 4
  8. மிளகு 1 1/2 ஸ்பூன்
  9. பூண்டு 5 பல்
  10. ஓமம் 2 ஸ்பூன்
  11. சுக்கு சிறு துண்டு
  12. பெருஞ்சீரகம் 1/4 முதல் 1/2 ஸ்பூன்
  13. மஞ்சள் தூள் 1 சிட்டிகை

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கைத் தோலோடு குக்கரில் 7,8 விசில் வேக வைத்து , பின்னர் தோல் உரித்து மசித்து வைக்கவும்.
  2. வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் நன்றாக வறுத்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, பின்னர் மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக கிளறவும்.
  4. பின்னர் அரைத்த மசாலா, உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து கிளறி,, பூரிமசாலா பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
  5. மிகவும் சுவையான நாஞ்சில் ஸ்பெஷல் ஓமம் உருளைக்கிழங்கு மசாலா தயார்..
  6. வாயு பிரச்சினை வராமல் தடுக்க உதவுவதால் பூரி சப்பாத்தி செய்யும் போது வழக்கமான உருளை மசாலாவுக்குப் பதிலாக இதை வீடுகளில் பாட்டிமார்கள் செய்வார்கள்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Kanak Patel
Oct-27-2017
Kanak Patel   Oct-27-2017

Yummy!

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்