Photo of Traditional Nonbu Kanji by Asiya Omar at BetterButter
811
10
0.0(2)
0

Traditional Nonbu Kanji

Oct-26-2017
Asiya Omar
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

Traditional Nonbu Kanji செய்முறை பற்றி

இஸ்லாமியர்கள் ரமலான் மாதம் நோன்பு சமயம் இந்த கஞ்சி செய்வார்கள்.அரிசி குருணையுடன்,பருப்பு,காய்கறிகள்,இறைச்சி ,தேங்காய்ப்பால்,இப்படி விருப்பம்போல் பொருட்கள் சேர்த்து செய்வது வழக்கம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பச்சை அரிசி - 1 கப்
  2. கடலை பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
  3. பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
  4. ஒரு பெரிய வெங்காயம் ,தக்காளி- 1
  5. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
  6. பூண்டு பற்கள் - 6
  7. பச்சை மிளகாய் -4
  8. மல்லி,புதினா - சிறிது.
  9. விரும்பினால் மசாலா பவுடர் - 1 டீஸ்பூன்
  10. பாதி தேங்காயில் பால் எடுக்கவும்.
  11. எண்ணெய், நெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
  12. உப்பு - தேவைக்கு.
  13. கஞ்சி பொடி செய்ய:-
  14. சீரகம்- 1 டீஸ்பூன், வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
  15. பெருஞ்சீரகம் - 1/2 டீஸ்பூன்
  16. ஏலம்-2,கிராம்பு-2,பட்டை - சிறிய துண்டு.
  17. தாளிக்க :-
  18. நறுக்கிய வெங்காயம் -1
  19. கறிவேப்பிலை - 2 இணுக்கு.
  20. இதனுடன் விரும்பினால் காய்கறிகள் கேரட்,பீன்ஸ்,பட்டாணி ஒரு கப்,அல்லது சிக்கன் அல்லது மட்டன் கீமா மசாலா சேர்த்து வேக வைத்து சேர்க்கலாம்.

வழிமுறைகள்

  1. அரிசி,பாசிபருப்பு,கடலை பருப்பு ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.தேங்காய்ப் பால் எடுத்து வைக்கவும்.
  2. குக்கரில் அரிசி,பருப்பு,8 கப் தண்ணீர்,கஞ்சிவ்பொடி,நறுக்கிய வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய்,மல்லி புதினா,விரும்பினால் மசாலா 1 டீஸ்பூன் ,உப்பு சேர்த்து மூடி வெயிட் போடவும்.
  3. ஒரு விசில் வரவும் அடுப்பைக் குறைத்து 20 நிமிடம் வைக்கவும். கஞ்சி வெந்தவுடன் திறந்து மசித்து விடவும்.தேவைக்கு சிறிது கொதி நீர் சேர்க்கவும்.
  4. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் நெய் விட்டு வெங்ககாயம்,கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.தேங்காய்ப்பால் சிறிது சுவைக்கு உப்பு சேர்க்கவும்.நுரை கூடி வரவும் அணைக்கவும்
  5. தாளித்த தேங்காய்ப்பாலை தயாரான கஞ்சியில் சேர்க்கவும்.கலந்து விட்டு உப்பு சரிபார்க்கவும்
  6. சுவையான நோன்பு கஞ்சி தயார்.மல்லி,புதினா சட்னி ,பருப்பு வடை அல்லது கத்திரிக்காய் பச்சடியுடன் பரிமாறலாம்.
  7. அடுப்பை அணைத்து ஆவியடங்கியவுடன் திறக்கவும்.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Kanak Patel
Oct-30-2017
Kanak Patel   Oct-30-2017

Awesome!

Manjula Jadhav
Oct-26-2017
Manjula Jadhav   Oct-26-2017

Healthy yummy kanji

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்