வீடு / சமையல் குறிப்பு / kUZHI PANIYARAM

Photo of kUZHI PANIYARAM by Priya Mani at BetterButter
2
9
4(1)
0

kUZHI PANIYARAM

Oct-26-2017
Priya Mani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • శాఖాహారం
 • తేలికైనవి
 • తమిళనాడు
 • చిరు తిండి

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. இட்லி / தோசை மாவு 2 கப்
 2. ரவை 1/2 கப்
 3. சின்ன வெங்காயம் 10 பொடியாக நறுகியது
 4. பச்சை மிளகாய் 3 பொடியாக நறுக்கியது
 5. கருவேப்பிலை 1 கொத்து
 6. துருவிய தேங்காய் 2 தேக்கரண்டி
 7. உளுத்தம்பருப்பு 1 ஸ்பூன்
 8. கடலைப்பருப்பு 1 ஸ்பூன்
 9. கடுகு 1 ஸ்பூன்
 10. எண்ணெய் 1 ஸ்பூன்
 11. எண்ணெய் பணியாரம் செய்ய தேவைக்கேற்ப
 12. பெருங்காயம் 3/4 ஸ்பூன்

வழிமுறைகள்

 1. முதலில் ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் என்னை விட்டு அதில் கடுகு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
 2. அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்
 3. வதக்கிய கலவையை இட்லி /தோசை மாவில் சேர்க்கவும்.
 4. அதனுடன் ரவை, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்
 5. குழி பணியார சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு கரண்டி அளவு மாவு ஊற்றி வேக விடவும்
 6. பின் பணியார குச்சி அல்லது ஸ்பூனால் மெதுவாக திருப்பி போடவும்.
 7. இரண்டு பக்கமும் நன்கு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்
 8. சுவையான சூடான குழி பணியாரம் தயார்
 9. இதனை தேங்காய் சட்டினியுடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Kanak Patel
Oct-30-2017
Kanak Patel   Oct-30-2017

Looks so perfect!

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்