வீடு / சமையல் குறிப்பு / Kandathipli & Arisithippli rasam

Photo of Kandathipli & Arisithippli rasam by Neeru Srikanth at BetterButter
89
7
0.0(1)
0

Kandathipli & Arisithippli rasam

Oct-26-2017
Neeru Srikanth
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • மீடியம்
 • தமிழ்நாடு
 • அப்பிடைசர்கள்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

 1. கண்டதிப்பிலி 1
 2. அரிசி திப்பிலி 2
 3. கடலைபருப்பு 3 டீஸ்பூன்
 4. ஜீரகம் 1 டீஸ்பூன்
 5. மிளகு 1/2 டீஸ்பூன்
 6. ஓமம் 1 டீஸ்பூன்
 7. கருவேப்பில்ல்லை சிறிதளவு
 8. பெருங்காயம் சிறிதளவு
 9. உப்பு தேவைக்கு ஏற்ப
 10. புளி - ஒரு எலுமிச்சை அளவு
 11. தண்ணீர் 1.5 கப்
 12. மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
 13. கொத்தமல்லி தேவைக்குஏற்ப
 14. நெய் 2 டீஸ்பூன்
 15. கடுகு 1 டீஸ்பூன்
 16. காய்ந்த மிளகாய் 1

வழிமுறைகள்

 1. ஒரு வாணலியில் கண்டத்திப்பிலி , அரிசிதிப்பிலி, கடலைப்பருப்பு , ஓமம் , மிளகு, கருவேப்பிலை ஆகியவற்றை நன்றாக வறுக்கவும்.
 2. வறுத்த பொருட்களை ஆறிய பிறகு நன்றாக பொடித்து கொள்ளவும். ரசப்பொடி ரெடி.
 3. புளியை நன்றாக 1 கப் தண்ணீரில் கரைத்து கொள்ளவும்
 4. ஒரு கனமான பாத்திரத்தில் புளி தண்ணீர் , பெருங்காயம் , உப்பு, மஞ்சள் , கருவேப்பிலை ஆகியவற்றை போட்டு நன்றாக கொதிக்க விடவும்
 5. 8 நிமிடம் கொதித்த பிறகு ரசப்பொடி மற்றும் 1/2 கப் தண்ணீரை சேர்த்து நன்றாக கலக்கவும்.
 6. இந்த ரசம் நுரை கட்டும் போது ,கொத்தமல்லி சேர்க்கவும். அதன் பிறகு காஸ் அணைக்கவும்.
 7. ரசத்துக்கு தாளிக்க ,ஒரு சிறு வாணலியில் நெய் ஊற்றி அதில் கடுகு, ஜீரகம் , காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தாளித்து ரசத்தில் கலக்கவும்
 8. சுட சுட ரசம் ரெடி!

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Kanak Patel
Oct-30-2017
Kanak Patel   Oct-30-2017

Wow! looks stunning

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்