உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / புளியோதரை

Photo of Tamarind Rice by Banupriya Jawahar at BetterButter
346
4
0(0)
0

புளியோதரை

Oct-26-2017
Banupriya Jawahar
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

புளியோதரை செய்முறை பற்றி

பயணங்களின் போது கட்டு சாதமாய் கொண்டு செல்லும் பாரம்பரிய உணவு

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • మీడియం/మధ్యస్థ
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • ప్రధాన వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உதிரியான சாதம் 2 கப்
  2. புளி 2 எலுமிச்சை அளவு
  3. மஞ்சள் தூள் 1 சிட்டிகை
  4. உப்பு தேவையான அளவு
  5. மண்டை வெல்லம் சிறிது
  6. தாளிக்க:
  7. கடுகு 1 தேக்கரண்டி
  8. கடலைப் பருப்பு 1 தேக்கரண்டி
  9. தோல் நீக்கிய நிலக்கடலை 1 கைப்பிடி
  10. அ. உ. பருப்பு 1 தேக்கரண்டி
  11. மிளகாய் வற்றல் 2
  12. பூண்டு 10
  13. கறிவேப்பிலை 1 இனுக்கு
  14. நல்லெண்ணெய் 1 குழிக் கரண்டி
  15. வறுத்து அரைக்க:
  16. மிளகு 1/2 தேக்கரண்டி
  17. வெந்தயம் 1 தேக்கரண்டி
  18. மல்லி விதை 1 தேக்கரண்டி
  19. மிளகாய் வற்றல் 3
  20. பெருங்காயத்தூள் சிறிதளவு

வழிமுறைகள்

  1. சாதத்தை உதிரியாக தயார் செய்து கொள்ளவும்
  2. புளியை கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ளவும்.
  3. ஒரு வாணலியில் ஒரு குழிக்கரண்டி அளவு நல்லெண்ணெய் விடவும்.
  4. எண்ணெய் சூடானதும், தாளிக்கும் பொருட்களை (நிலக்கடலை தவிர) சேர்த்து தாளிக்கவும்.
  5. அதோடு புளிக் கரைசலை சேர்க்கவும்.
  6. உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து சிறு தீயில் கொதிக்க விடவும்.
  7. இன்னொரு வாணலியில் வறுத்து அரைக்க வேண்டிய பொருட்களை எல்லாம் வறுத்து கொர கொரப்பாக அரைத்து புளிக் கரைசலில் சேர்க்கவும்.
  8. புளிக் கரைசல் கொதித்து, கெட்டியாக எண்ணெய் பிரிந்து வரும்போது அடுப்பை அணைத்து விடவும்.
  9. புளிக் கரைசலை ஆற விடவும்.
  10. நிலக்கடலையை வெறும் வாணலியில் வறுத்து சேர்க்கவும்
  11. வெல்லத்தை பொடித்து சேர்க்கவும்.
  12. இப்பொழுது புளிக் காய்ச்சல் ரெடி.
  13. உதிரியான சாதத்தை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கொட்டி, கொஞ்சம் கொஞ்சமாக புளிக் காய்ச்சலை விட்டு மென்மையாக கிளறவும்.
  14. தயார் செய்த புளியோதரையை கால் மணி நேரம் ஒரு வெள்ளை காட்டன் துணி கொண்டு மூடவும்.
  15. கால் மணி நேரம் கழித்து பரிமாறவும்.
  16. அவித்த முட்டை/தேங்காய் துவையல்/கொண்டைக்கடலை சுண்டல்/ உருளைக்கிழங்கு வறுவல்/அப்பளம் இதற்கு நல்ல காம்பினேஷன்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்