Photo of VADACURRY by Priya Mani at BetterButter
1087
5
0.0(1)
0

VADACURRY

Oct-27-2017
Priya Mani
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலைப்பருப்பு 1 கப்
  2. பச்சை மிளகாய் 2
  3. சோம்பு 1/2 ஸ்பூன்
  4. வெங்காயம் 2
  5. தக்காளி 1
  6. பூண்டு 2 மண்டை
  7. மிளகாய் தூள் 3/4 ஸ்பூன்
  8. மல்லி தூள் 1 ஸ்பூன்
  9. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  10. உப்பு தேவைக்கேற்ப
  11. கருவேப்பிலை 2 கொத்து
  12. பிரியாணி இலை 2
  13. பட்டை சிறு துண்டு
  14. லவங்கம் 2
  15. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  16. கொத்தமல்லி தழை சிறிது
  17. எண்ணெய் 2 கரண்டி

வழிமுறைகள்

  1. கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும். பின் தண்ணிரை வடித்து கொண்டு மிக்ஸியில் கொர கொர பாக உப்பு மற்றும் சோம்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்
  2. அரைத்த விழுதை இட்லி தட்டில் சிறு சிறு உருண்டையாக வைத்து 15 நிமிடம் வேக விடவும்
  3. வேக வைத்த வடையை சிறு சிறு துண்டுகளாக உடைத்து கொள்ளவும்
  4. வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கவும்
  5. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரியாணி இலை , பட்டை, கிராம்பு முழு பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்
  6. அதனோடு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் .வெங்காயம் சற்று வதங்கியதும் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்
  7. அதனுடன் தக்காளி உப்பு ,மஞ்சள் தூள், மல்லி தூள் ,மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்..
  8. 1/2 கப் தண்ணிர் சேர்த்து நன்றாக 10 நிமிடம் சிறு தீயில் கொதிக்க விடவும்
  9. நன்கு கொதிக்கும் நேரத்தில் உடைத்த வடையை அதில் சேர்க்க வேண்டும்
  10. கரண்டியால் நன்கு மசித்து கலக்க வேண்டும் .இன்னும் 2 கப் அல்லது தேவையான தண்ணிர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்
  11. கொதிக்கும் போதே நல்ல மனம் வரும்
  12. தேவை என்றால் தேங்காய் அரைத்தும் விடலாம் ..சுவை இன்னும் நன்றாக இருக்கும்
  13. கொத்தமல்லி தழை தூவி சூடான இட்லி தோசை செட் தோசையோடு பரிமாறலாம்
  14. சூடான சுவையான வடகறி தயார்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mani Iyer
Oct-28-2017
Mani Iyer   Oct-28-2017

Recipes & process nice elaborated. Mostly Chennaities famous side dish..

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்